»   »  சொதப்பும் மேகா நாயர்

சொதப்பும் மேகா நாயர்

Subscribe to Oneindia Tamil
Meghna Naidu
நடிக்க வந்த குறுகிய காலத்திற்குள்ளேயே கால்ஷீட் குழப்பம் செய்யும் நடிகை என்ற பெருமையை மேகா நாயர் பெற்று விட்டாராம். இதனால் தயாரிப்பாளர்கள் மேகாவை புறக்கணிக்க ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகிறது.

பசுபதி மே.பா. ராசக்காபாளையம் படத்தில் அட்டகாசமான முண்டு, துண்டோடு டீக்கடைப் பெண்ணாக வந்த ரசிகர்களை குளிர்வித்தவர்தான் மேகா நாயர்.

முதல் படத்திலேயே அவரது கவர்ச்சி தெள்ளத் தெளிவாக வெளிப்பட்டதால் அவருக்கு கோலிவுட்டில் புது டிமாண்ட் ஏற்பட்டது. அடுத்த படத்திலேயே சத்யராஜுடன் ஜோடி சேர்ந்து விட்டார் மேகா. படத்தின் பெயர் தங்கம்.

சத்யராஜ், கவுண்டமணியின் கலக்கல் நடிப்பில் உருவாகியுள்ள தங்கம் படத்தில் சத்யராஜுக்கு ஜோடியாக நடிக்கும் மேகா, இப்போது புதுப் பெயர் ஒன்றை தட்டிச் சென்றுள்ளார். அதாவது கால்ஷீட் சொதப்பலில் கலக்கலாக ஈடுபடுகிறாராம் மேகா.

மேகாவின் திறமையைப் பார்த்து வியந்து போய் அவரைத் தேடி ஓரிரு பட வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஆர்வக் கோளாறிலா அல்லது தெரியாத்தனமாக செய்தாரா என்று தெரியவில்லை, வந்த படங்களுக்கு கால்ஷீட்களை சொதப்பலாக கொடுத்து குழப்பியுள்ளார்.

இதனால் கடுப்பாகிப் போன தயாரிப்பாளர்கள், சங்கத்தில் பஞ்சாயத்து கூட்டியுள்ளனர். மேலும் மேகாவை விட்டு விட்டு வேறு நடிகையைப் போடவும் தீர்மானித்தனர்.

கேள்விப்பட்ட மேகா சம்பந்தப்பட்டவர்களை அணுகி, இனிமேல் இப்படி குழப்பம் ஏற்படாது, அதற்கு நான் கியாரண்டி தருகிறேன், தயவு செய்து வேறு நடிகையைப் போட்டு விடாதீர்கள் என் கொஞ்சலாக கேட்டுக் கொண்டாரம்.

இதனால் தயாரிப்பாளர்கள் மேகாவையே வைத்துக் கொள்ள தீர்மானித்துள்ளார்ளாம்.

அதுக்குள்ளேயுமா?

Read more about: meghanair
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil