»   »  எம்ஜிஆர் - ரஜினிகாந்த்... ஒரு பாடலாசிரியரின் ஒப்பீடு இது!

எம்ஜிஆர் - ரஜினிகாந்த்... ஒரு பாடலாசிரியரின் ஒப்பீடு இது!

Posted By:
Subscribe to Oneindia Tamil

திரையிலகில் இருந்து வந்தவர்களில் எம்ஜியாருக்குப் பிறகு
மக்களின் அபிமானத்தை பெற்றவர் என்றால் அது ரஜினி மட்டும்தான் .. இதில் மிகை ஏதுமில்லை!

இருவர் படங்களின் தலைப்புகளைப் பாருங்கள்...

MGR - Rajinikanth, a comparison

எம்ஜிஆர் என்பது மூன்றெழுத்து
ரஜினி என்பதும் மூன்றெழுத்து

எம்ஜிஆர் சிறுவயதிலயே தந்தையை இழந்தவர்
ரஜினி சிறுவயதிலேயே தாய் தந்தை இழந்தவர்

எம்ஜியார் ஒரு தனிபிறவி
ரஜினி ஒரு அதிசய பிறவி

எம்ஜியாருக்கு ராஜராஜன்
ரஜினிக்கு ராஜாதி ராஜா

எம்ஜியாருக்கு மன்னாதி மன்னன்
ரஜினிக்கு மன்னன்

எம்ஜியாருக்கு மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன்
ரஜினிக்கு பாண்டியன்

எம்ஜியாருக்கு தாய் சொல்லை தட்டாதே
ரஜினிக்கு தாய் மீது சத்தியம்

எம்ஜியாருக்கு தொழிலாளி
ரஜினிக்கு உழைப்பாளி

எம்ஜியாருக்கு நல்லவன் வாழ்வான்
ரஜினிக்கு நல்லவனுக்கு நல்லவன்

எம்ஜியாருக்கு உழைக்கும் கரங்கள்
ரஜினிக்கு துடிக்கும் கரங்கள்

எம்ஜியாருக்கு ஊருக்கு உழைப்பவன்
ரஜினிக்கு ஊர்க்காவலன்

எம்ஜியாருக்கு மதுரைவீரன்
ரஜினிக்கு மாவீரன்

எம்ஜியாருக்கு தலைவன்
ரஜினிக்கு தரமத்தின் தலைவன்

எம்ஜியாருக்கு வேட்டைக்காரன்
ரஜினிக்கு வேலைக்காரன் ...

எம்ஜியார் செத்து பிழைத்து மறுபிறவி எடுத்தவர் ...

அதேபோல ரஜினியும் செத்து பிழைத்து மறுபிறவி எடுத்துவந்தவர் ...

எம்ஜியாருக்கு உள்ள வெறித்தனமான ரசிகர் கூட்டம் போலவே ரஜினிக்கும் வெறித்தனமான பெரும் ரசிகர் பட்டாளம் இருக்கிறது.

முதல்வராகும் முன்பே தான தர்மங்கள், கல்வி உதவிகள் செய்து வள்ளலாய் பெயரெடுத்தவர் எம்ஜிஆர். ரஜினியும் இலவச திருமணங்கள், பணியாளர்களுக்கு வீடுகள், மாணவர்களுக்கு கல்வி உதவிகள், ஏராளமான பண உதவிகள் என செய்து வருபவர். அதுவும் எந்த விளம்பரமும் இல்லாமல்!

எம்ஜியார் எப்படி பாட்டாளி பாமர மீனவ விவசாய மக்களின் பேராதரவோடு ஆட்சியை பிடித்தாரோ, அதேபோல ரஜினியும் தமிழகத்தில் ஆட்சியை பிடித்து முதல்வர் ஆவார் !

- முருகன் மந்திரம்

English summary
Late CM MGR and Superstar Rajinikanth... A comparison.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil