»   »  எம்ஜிஆரை வைத்து 17 வெற்றிப் படங்கள் தந்த இயக்குநர் ப நீலகண்டன் நூற்றாண்டு விழா!

எம்ஜிஆரை வைத்து 17 வெற்றிப் படங்கள் தந்த இயக்குநர் ப நீலகண்டன் நூற்றாண்டு விழா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ்த் திரையுலகின் நட்சத்திர இயக்குநரான ப நீலகண்டனின் நூறாவது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது.

விழுப்புரம் மாவட்டத்தில் அக்டோபர் 2, 1916-ம் ஆண்டு பிறந்தவர் ப நீலகண்டன். நாடகங்களை எழுதி இயக்கிக் கொண்டிருந்தவர், நாம் இருவர் படம் மூலம் திரையுலகுக்கு வந்தார்.

MGR's friend director P Naeelakantan's centenary year

இவர் எழுதிய நாம் இருவர் நாடகத்தை ஏவி மெய்யப்பச் செட்டியார் வாங்கி படமாக எடுத்தார். அதற்கு ப நீலகண்டன் வசனம் எழுதினார். தொடர்ந்து வேதாள உலகம், வாழ்க்கை போன்ற ஏவிஎம் படங்களுக்கு வசனங்கள் எழுதினார். அறிஞர் அண்ணா எழுதிய ஓர் இரவு படம்தான் ப நீலகண்டன் இயக்கிய முதல் படம்.

புரட்சித் தலைவர், பொன்மனச் செம்மல் எம்ஜிஆரை வைத்து அதிகப் படங்கள் (17) இயக்கியவர் ப நீலகண்டன். எம்ஜிஆரின் நெருங்கிய நண்பர். எம்ஜிஆர் இயக்கிய உலகம் சுற்றும் வாலிபன், மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் படங்களில் அவருக்கு பக்கபலமாக இருந்தார். அந்த நன்றியை மறக்காமல் படத்தின் டைட்டிலில் குறிப்பிட்டிருப்பார் எம்ஜிஆர்.

MGR's friend director P Naeelakantan's centenary year

இருவரும் இணைந்த அத்தனைப் படங்களும் சூப்பர் ஹிட்டடித்தவைதான்.

அந்தப் படங்கள்...

சக்கரவர்த்தி திருமகள் - 1957

திருடாதே - 1961

நல்லவன் வாழ்வான் - 1961

கொடுத்து வைத்தவள் - 1961

காவல்காரன் - 1967

கண்ணன் என் காதலன் - 1968

கணவன் - 1968

மாட்டுக்கார வேலன் - 1970

என் அண்ணன் - 1970

MGR's friend director P Naeelakantan's centenary year

குமரி கோட்டம் - 1971

நீரும் நெருப்பும் - 1971

ஒரு தாய் மக்கள் - 1971

சங்கே முழங்கு - 1972

ராமன் தேடிய சீதை - 1972

உலகம் சுற்றும் வாலிபன் - 1973 - இயக்குநர் எம்ஜிஆரின் ஆலோசகர்

நேற்று இன்று நாளை - 1974

நினைத்ததை முடிப்பவன் - 1975

நீதிக்கு தலைவணங்கு - 1976

மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன் - 1978 - இயக்குநர் எம்ஜிஆர்... ஆலோசகர் ப நீலகண்டன்.

மற்ற படங்கள்

ஓர் இரவு - 1951

கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி - 1954

ஷிவசரண நம்பேக்க - 1955 (கன்னடம்)

முதல் தேதி - 1955

மொதலடேடி - 1955 (கன்னடம்)

கோமதியின் காதலன் - 1955

MGR's friend director P Naeelakantan's centenary year

தேடி வந்த செல்வம் - 1958

சுனீதா - 1958 (சிங்களம்)

ஆட வந்த தெய்வம் - 1960

எதையும் தாங்கும் இதயம் - 1962

ராஜ் மகால் - 1961

பூம்புகார் - 1962

சுஜாகே ரகாசா - 1964 (சிங்களம்)

பூமாலை - 1965

ஆனந்தி - 1965

தெய்வ திருமணங்கள் - 1981 (கடைசி படம்)

1965 முதல் 1978 வரை 13 ஆண்டுகள் தொடர்ந்து எம்ஜிஆர் படங்களை மட்டுமே இயக்கினார் ப நீலகண்டன் என்பது குறிப்பிடத்தக்கது.

MGR's friend director P Naeelakantan's centenary year
English summary
MGR's very close friend director P Naeelakantan's centenary year was celebrated yesterday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil