twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    சென்னை அருகே எம்ஜிஆருக்கு ரசிகர்கள் கட்டிய கோயில் திறப்பு!

    By Shankar
    |

    MGR Temple
    புரட்சித் தலைவர், மக்கள் திலகம், பொன்மனச் செம்மல் என மக்களால் புகழப்பட்ட தலைவர் அமரர் எம்ஜிஆர்.

    திரையுலகில் அவர் இருந்தவரை வசூல் சக்கரவர்த்தியாகத் திகழ்ந்தார். அடுத்து அரசியலில் அடிவைத்த நாளிலிருந்து வெற்றிமேல் வெற்றி பெற்றார். இறுதி மூச்சு வரை, யாராலும் அசைக்க முடியாத தன்னிகரில்லாத தலைவராகத் திகழ்ந்தார் எம்ஜிஆர்.

    அவரது ஆட்சிமுறையை அன்றைக்கு விமர்சித்த அத்தனை பேரும், இன்று எம்ஜிஆரின் ஆட்சிக் காலமே பொற்காலம் என புகழ்கிறார்கள். அன்று எம்ஜிஆர் கொண்டு வந்த திட்டங்களே இன்று புகழ்பெற்று விளங்குகின்றன.

    சத்துணவு, இலவச சீருடை, இலவச சைக்கிள், 108 ஆம்புலன்ஸ் போன்றவை எம்ஜிஆர் அன்றைக்கே கொண்டுவந்த திட்டங்களில் சில.

    இன்றைக்கு எம்ஜிஆரின் தீவிர ரசிகர்கள், அவரை கடவுளாக்கி, கோயில்கள் கட்டி வழிபட்டு வருகின்றனர்.

    சென்னை அருகே திருநின்றவூர் நத்தமேடு செல்லியம்மன் சாலையில் சமீபத்தில் அவர் பெயரில் புதிதாக கோயில் ஒன்று கட்டப்பட்டுள்ளது.

    கோவிலுக்குள் எம்.ஜி. ஆரின் மூன்று சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன. ஆறு அடி உயரத்திலான ஒரு சிலை மூலவர் சிலையாக வைக்கப்பட்டு உள்ளது. அச்சிலையின் வலப்புறமும், இடப்புறமும் இரண்டு அடி உயரத்தில் இரு சிலைகள் வைக்கப்பட்டு உள்ளன.

    கோவில் கோபுரத்தில் ஒருசிலை நிர்மானிக்கப்பட்டு உள்ளது. இந்த கோவிலை எம்.ஜி. ஆரின் தீவிர ரசிகரான எல்.கலைவாணன் கட்டியுள்ளார். கோவிலின் நிர்வாக பொறுப்பை ஏற்றுள்ள அவர் கூறும்போது, 1600 சதுரஅடி பரப்பளவில் அருள்மிகு எம்.ஜி.ஆர். கோவில் கட்டப்பட்டு உள்ளது. இதை கட்ட ரூ.21.5 லட்சம் செலவிடப்பட்டு உள்ளது. இதில் 1.5 லட்சம் ரூபாய் ரசிகர்களிடம் வசூலிக்கப்பட்டன என்றார்.

    இந்தக் கோயிலின் கும்பாபிஷேக விழா சுதந்திர திருநாளான இன்று நடந்தது.

    அதிகாலையில் யாகசாலை பூஜைகள் நடந்தன. புரோகிதர்கள் வேதமந்திரம் ஓதினர்.பின்னர் கலசங்களில் புனித நீர் எடுத்துச் செல்லப்பட்டது. காலை 10 மணிக்கு எம்.ஜி.ஆர். சிலைக்கு கும்பாபிஷேகம் நடந்தது. விழாவில் ஏராளமான எம்.ஜி.ஆர். ரசிகர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர்.

    English summary
    Hardcore fans of late legend MGR built a temple for their 'god MGR' at Thirunindravur, Chennai. The inaugural ceremony of the temple was held in grand manner today with holy Kumbabhisheka.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X