»   »  தமிழுக்கு வரும் 'மிர்ச்சி' மூவிஸ்

தமிழுக்கு வரும் 'மிர்ச்சி' மூவிஸ்

Subscribe to Oneindia Tamil
Mirchi movies logo

டைம்ஸ் குழுமத்தின் திரைப்பட தயாரிப்பு நிறுவனமான மிர்ச்சி மூவிஸ் லிமிட்டெட், தமிழில் படத் தயாரிப்பில் ஈடுபடவுள்ளது. இதற்காக பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் மற்றும் மோசர் பெயர் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

மிர்ச்சி மூவிஸ் நிறுவனம், படத் தயாரிப்பு, மார்க்கெட்டிங், விநியோகம் உள்ளிட்டவற்றை இந்தியாவிலும், இந்தியாவைத் தாண்டியும் செய்து வருகிறது.

தற்போது இந்த நிறுவனம் தென்னிந்தியாவிலும் கால் பரப்புகிறது. இதற்காக பிரகாஷ் ராஜின் டூயட் மூவிஸ் மற்றும் மோசர்பெயர் நிறுவனத்துடன் மிர்ச்சி மூவிஸ் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

இந்த மூன்று நிறுவனங்களும் இணைந்து தயாரித்துள்ள முதல் படம் வெள்ளித்திரை. விஜி இப்படத்தை இயக்கியுள்ளார் பிருத்விராஜ், கோபிகா, பிரகாஷ் ராஜ் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இதுகுறித்து மிர்ச்சி மூவிஸ் நிறுவனத்தின் தலைமை இயக்க அதிகாரி முனீஷ் பூரி கூறுகையில், வெள்ளித்திரை படத்தை டூயட் மூவிஸ் மற்றும் மோசர்பெயருடன் இணைந்து தயாரித்துள்ளதற்காக பெருமைப்படுகிறோம்.

தமிழில் சிறந்த கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளனர். வெள்ளித்திரை தவிர மேலும் மூன்று படங்களைத் தயாரிக்கத் திட்டமிட்டுள்ளோம்.

எங்களது நிறுவனத்தின் இரு படங்களை இயக்குவதற்கு மிலிந்த் ராவ் என்ற இயக்குநரை ஒப்பந்தம் செய்துள்ளோம். ஒரு படத்திற்கு காதல் 2 கல்யாணம் என பெயரிட்டுள்ளோம். இது காமெடிப் படமாகும்.

மிலிந்த் ராவ், மணிரத்தினத்திடம் உதவியாளராக குரு உள்ளிட்ட 4 படங்களுக்கு பணியாற்றியுள்ளார்.

காதல் 2 கல்யாணம் 2008ம் ஆண்டு வெளியாகும்.


இதுதவிர மலையாளத்தில் வெளியாகி வெற்றி பெற்ற சாக்லேட் என்ற படத்தின் தமிழ் ரீமேக் உரிமயையும் பெற்றுள்ளோம்.

அனைவரையும் கவரும் வகையிலான படங்களை மிர்ச்சி மூவிஸ் தயாரிக்கும் என்றார் பூரி.

பூரி தலைமையிலான மிர்ச்சி மூவிஸ் நிறுவனம், ஆங்கிலத்தில் பீயிங் சைரஸ் என்ற படத்தை தயாரித்துள்ளது. இதுதான் அந்த நிறுவனத்தின் முதல் பொழுதுபோக்கு சித்திரம் ஆகும். இப்படத்தை ஹோமி அடஜானியா இயக்கியிருந்தார். நஸ்ருதின் ஷா, சைப் அலிகான், டிம்பிள் கபாடியா, பொமன் இரானி ஆகியோர் நடித்திருந்தனர்.

அதேபோல, இந்தியிலும் இந்த நிறுவனம் படத் தயாரிப்பில் ஈடுபட்டுள்ளது. மலையாளத்திலும் நுழைந்துள்ளது.

2009ம் ஆண்டு மார்ச் மாத வாக்கில் 12 முதல் 15 படங்களை இந்தியாவிலும், உலக அளவிலும் வெளியிட ஆயத்தமாகி வருகிறது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil