»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழுலகுக்கு சிறகடித்து வந்திறங்கிறங்கிறது இன்னொரு மும்பை பறவை.

இவரது ஒரிஜினல் நாமகரணம் அஞ்சலி. கோடம்பாக்கத்துக்காரர்கள் வைத்த பெயர் பிஷாஷா. இதுரொம்ப பயமுறுத்துவதாக இருப்பதாக பலர் சுட்டிக் காட்டவே, இப்போது மிசா என்றுமாற்றியிருக்கிறார்கள். (இந்தப் பேரு எத்தனை நாளைக்கோ?)

செவ்வேல் என்ற படத்தில் ஜெய் ஆகாஷுக்கு ஜோடியாக நடித்துக் கொண்டிருக்கிறார். முதலில்அஞ்சலி என்று ஒரிஜினல் பெயரிலேயே அறிமுகம் செய்த படக் குழு, இப்போது இவரை மிசாஎன்கிறது.

ஆள், அழகிய பிஷாசு தான். அசத்தல் பார்வை, கலக்கல் கலர். கேமராவுக்கு முன் வரும்போதேஅச்சம், மடம், நாணம் என அனைத்தையும் பொட்டலம் கட்டி, ஓரமாய் வைத்துவிட்டு வந்துநிற்கிறார்.

இதில் ஹீரோவாக நடிக்கும் ஜெய் ஆகாஷ் மச்சக்காரர்தான். ஆகாஷுக்கு ஒரு இச் கொடுக்கவேண்டும் என்று டைரக்டர் சொல்ல, பச் என்று வைத்துவிட்டு வந்து நிற்கிறார். இது போதுமாஎன்கிற மாதிரி ஒரு அசால்டான பார்வை.

அகத்தியனின் இயக்கத்தில் ஸ்ரீதேவிகாவுக்கு ஜோடியாக ஆகாஷ் நடித்த ராமகிருஷ்ணா படம்இன்னும் வெளியே வரவில்லை. ஆனால் அதற்குள் இந்தப் பட வாய்ப்பு தேடி வந்துவிட்டதுஆகாஷுக்கு. கூடவே, ஜோடியாக மிசா மாதிரி ஒரு கட்டை.

படத்தில் ஆகாஷின் தந்தையாக ராஜ்கிரண் நடிக்கிறார். தந்தை- மகன் பாசத்தை முன் வைத்து நகரும்கதையாம். இந்தப் பாசத்தை உடைக்க ஆகாஷின் வாழ்க்கையில் நுழையும் கேரக்டர் தான் நம்மிசாவுக்கு.

படத்தை தயாரித்து, இயக்குவது பிரிமூஸ் என்ற புதுமுகம். இசையமைப்பாளராக ஆசான் என்பவர்அறிமுகமாகிறார்.

படம் பிரான்ஸ், இத்தாலி, கொழும்பு என அன்னிய மண்ணிலும் சென்னையிலும் உருவாகிக்கொண்டிருக்கிறது. படபடவென 2 மாதத்தில் படத்தை முடித்து வெளியிடப் போகிறார்களாம்.

படத்தில் மிசாவின் புண்ணியத்தால் மும்தாஜ், தேஜா ஸ்ரீ போன்றவர்களின் குலுக்கலுக்கெல்லாம்வேலையே இல்லையாம். எல்லா குலுக்கலையும் குத்தகைக்கு வாங்கி குத்தாட்டாம் போடுகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil