»   »  மிஸ் யுனிவர்ஸ் ஆவாரா பூஜா குப்தா?

மிஸ் யுனிவர்ஸ் ஆவாரா பூஜா குப்தா?

Subscribe to Oneindia Tamil

மெக்ஸிகோ சிட்டியில் இன்று இரவு நடைபெறும் மிஸ் யுனிவர்ஸ் போட்டியில் இந்தியாவின் பூஜா குப்தா பட்டம் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு உலகெங்கிலும் உள்ள இந்தியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

உலக அழகிகளின் சொர்க்க போட்டிகளில் ஒன்றுதான் மிஸ் யுனிவர்ஸ். உலக அளவில் சிறந்த அழகிகளைத் தேர்ந்தெடுக்கும் இந்தப் போட்டி தற்போது மெக்ஸிகோ தலைநகர் மெக்ஸிகோ சிட்டியில் நடந்து வருகிறது.

இன்று இரவு 9 மணிக்கு (இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு) இறுதிப் போட்டி நடைபெறுகிறது. மெக்ஸிகோ சிட்டியில் உள்ள தேசிய ஆடிட்டோரியத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் 70 நாடுகளின் அழகிகள் கலந்து கொள்கின்றனர்.

இவர்களில் இந்தியாவின் பூஜா குப்தாவும் ஒருவர். 23 வயதாகும் பூஜா குப்தா எழுத்தில் ஆர்வம் கொண்டவர். பெரிய எழுத்தாளராக வேண்டும் என்ற வேட்கையுடன் இருப்பவர். சமூக சேவையிலும் தீராத தாகம் கொண்டவர்.

டெல்லியைச் சேர்ந்த பூஜா குப்தா, மிஸ் யுனிவர்ஸ் பட்டத்தை வெல்வதில் உறுதியாக இருக்கிறார். இன்று இரவு நடக்கும் இறுதிச் சுற்றில் பூஜா குப்தா செயல்படும் விதத்திலும், மற்ற அழகிகளிடமிருந்து தன்னை வித்தியாசப்படுத்திக் காட்டிக் கொள்வதிலும்தான் அந்த வெற்றி கைவசமாகும் வாய்ப்பு உள்ளது.

உலக அளவில் அழகிய அழகிகளைக் கொடுத்த நாடு இந்தியா. அந்த வரிசையில் பூஜா குப்தாவும் சேருவாரா என்பதை நாளை காலை வரை பொறுத்திருந்து பார்ப்போம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil