»   »  அலெக்சாண்டர் மோகன்லால்

அலெக்சாண்டர் மோகன்லால்

Subscribe to Oneindia Tamil

மாவீரன் அலெக்சாண்டர் கேரக்டரில் புதிய படம் ஒன்றில் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடிக்கவுள்ளார்.

அலெக்சாண்டர் கதையாக இருந்தாலும் கூட வரலாற்றுப் படமாக இதை எடுக்காமல் காமெடிப் படமாக உருவாக்கப் போகிறாராம் இயக்குநர் முரளி நாகவள்ளி.

ஆகஸ்ட் இறுதியில் படப்பிடிப்பு தொடங்குகிறது. இப்படத்துக்கு முன்பாக மோகன்லால் தற்போது நடித்து வரும் காலேஜ் குமரன் மற்றும் இரு பிற படங்களை முடித்து விடுவாராம்.

பவித்ரம் உள்ளிட்ட படங்களுக்கு திரைக்கதை எழுதிய பி.பாலச்சந்திரன் இப்படத்தின் திரைக்கதையை அமைக்கவுள்ளார். மோகன்லால் ரசிகர்களுக்கேற்ற அனைத்து விஷயங்களும் படத்தில் இடம்பெறுமாம்.

புதுச்சேரி, கோவா, மும்பை உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பை மேற்கொள்ளவுள்ளனர். 2008ம் ஆண்டு ஓணம் பண்டிகையின்போது படம் திரைக்கு வருமாம்.

இப்படத்துக்காக மோகன்லால் 40 நாள் கால்ஷீட்தான் கொடுத்துள்ளாராம். அதற்குள் அவர் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்து முடிக்கப்பட்டு விடுமாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil