»   »  சென்னையில் அலிபாய்!

சென்னையில் அலிபாய்!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் நடித்துள்ள அலி பாய் படம் கேரளாவில் ஹிட் ஆகியுள்ளது. சென்னையிலும் இப்படம் திரையிடப்பட்டுள்ளது.

மோகன்லால் நடித்துள்ள புதிய படம் அலிபாய். மலையாளிகளின் பொங்கல் பண்டிகை எனக் கூறப்படும் ஓணம் பண்டிகையையொட்டி இப்படம் வெளியாகியுள்ளது.

கேரளாவில் 75 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. நேற்று படம் திரையிடப்பட்ட முதல் நாளிலேயே 400 காட்சிகளை ஓட்டினராம்.

ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள இப்படத்தில், கோபிகாவும், நவ்யா நாயரும், மோகன்லாலுக்கு ஜோடியாக நடித்துள்ளனர்.

ரம்ஜான் மாதம் இன்னும் 3 மாதங்களில் பிறக்கவுள்ளதால், அப்போதும் படத்துக்கு நல்ல கூட்டம் வரும் என்ற நம்பிக்கையில் உள்ளனர் படத் தயாரிப்பாளர்களான ஆசிர்வாத் சினிமாஸ் நிறுவனத்தார்.

சென்னையிலும் அலிபாய் திரையிடப்பட்டுள்ளது. 3 தியேட்டர்களில் இப்படம் திரையிடப்பட்டுள்ளது. தினசரி 12 காட்சிகளை ஓட்டிக் கொண்டிருக்கின்றனர். ஒரு வாரத்திற்குப் படம் முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாம். வருகிற வசூல் தியேட்டர்காரர்களுக்கு பரம சந்தோஷத்தைக் கொடுத்துள்ளதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil