»   »  மோகன்லால் ஷோ - 2007

மோகன்லால் ஷோ - 2007

Posted By:
Subscribe to Oneindia Tamil

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் அமெரிக்காவில் கலை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்கிறார். முற்றிலும் மோகன்லால் ஸ்பெஷல் ஷோவான இதில் அவருடன் அவரது குடும்பத்தினரும் பங்கேற்றுள்ளனர்.

மோகன்லால் ஷோ 2007 என இதற்குப் பெயரிடப்பட்டுள்ளது. தாரா கிரியேஷன்ஸ் இந்த நிகழ்ச்சியை ஸ்பான்சர் செய்கிறது. நியூயார்க், வாஷிங்டன், அட்லாண்டா உள்ளிட்ட 15 அமெரிக்க நகரங்களிலும் கனடாவிலும் இந்த கலை நிகழ்ச்சி நடைபெறுகிறது. ஆகஸ்ட் 26ம் தேதி தொடங்கிய இந்த கலை நிகழ்ச்சி செப்டம்பர் 23ம் தேதி வரை நடைபெறுகிறது.

மோகன்லாலின் தந்தை சில மாதங்களுக்கு முன்பு மரணமடைந்ததால் இந்த ஆண்டு ஓணம் பண்டிகையை மோகன்லால் கொண்டாடவில்லை. எனவே இந்த மெகா கலை நிகழ்ச்சியை நடத்த மோகன்லால் திட்டமிட்டுள்ளார்.

ஜோஷி இந்த நிகழ்ச்சியை வடிவமைத்து இயக்கியுள்ளார். கலை நிகழ்ச்சியில் முகேஷ், ஜெகதீஷ், வினீத், லட்சுமி கோபாலசாமி, ஸ்வேதா மேனன், ரிம்மி டாமி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த நிகழ்ச்சிக்காக அமெரிக்கா சென்றுள்ள மோகன்லால் செப்டம்பர் 26ம் தேதி சென்னைக்கு வருகிறார். அங்கு காலேஜ் குமரன் படத்தின் ஷூட்டிங்கில் கலந்து கொள்கிறார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil