»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழிலாவது, நான் நடிப்பதாவது என்று எகத்தாளமாக பேசிக் கொண்டிருந்த மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் இப்போது தமிழ்ப் படங்களில் நடிக்க யாராவது அணுகினால், பார்மாலிட்டிக்காக கதை கேட்டு விட்டு உடனேதலையாட்டி விடுகிறாராம்.

மோகன் லாலுக்கு எந்தாயி? என்று விசாரித்துப் பார்த்தபோது சில தகவல்கள் காதில் விழுந்தன.

ஷகீலாவின் பலான படங்களால் தொடர்ந்து தங்களது படங்கள் ஊத்தி வந்ததால் மம்மூட்டியும் மோகன்லாலும்ஒன்று சேர்ந்தனர். இருவரும் சேர்ந்து மலையாள திரையுலகை ஒன்று திரட்டி ஷகீலாவை விரட்டியடித்தனர்.

இதன்மூலம் தங்கள் படங்கள் இனி நன்றாக ஓடும் என்று கனவு கண்டனர். ஆனால், நினைத்தது நடக்கவில்லை.

மோகன் லாலுக்கும், மம்மூட்டிக்கும் (இவர் தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் தமிழ் மக்கள் மனதில்இன்னும் ஒட்டவில்லை!) மார்க்கெட் கடுமையாக டவுன் ஆகி விட்டது.

திலீப் என்ற நடிகருக்கும் (ராஜ்ஜியம் படத்தில் விஜயகாந்த்தின் தம்பியாக வருவாரே, அவரேதான்) புதுநடிகர்களுக்கும்தான் இப்போது மார்க்கெட் நன்றாக உள்ளது. திலீப் கிட்டத்தட்ட சூப்பர் ஸ்டார் லெவலுக்குஉயர்ந்து விட்டார்.

மோகன் லால், மம்மூட்டி படங்களை விட இவரது படம்தான் அதிக விலைக்கு விற்கின்றன. நன்றாகவும் ஓடுகின்றன.

சமீபத்தில் மம்மூட்டி நடித்த பேன்டம் என்ற படம் அட்டர் பிளாப். அதேபோல, மோகன் லால் நடித்த பிரஜா என்றபடமும் ஊத்திக் கொண்டது.

இதுபோதாதென்று, ஷர்மிளி, மயா, ரேஷ்மா ஆகியோரின் ஏ ரக படங்களும் கடும் போட்டியாக இருப்பதால்,மோகன்லாலும், மம்ட்டியும் தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு உட்கார்ந்திருக்கிறார்களாம்.

இதனால்தான் "வெவரமாக" மம்மூட்டி பல தமிழ்ப் படங்களை ஒத்துக் கொண்டு நடித்து வருகிறார்.

அவரது பாணியில் இப்போது மோகன் லாலும் தமிழ்ப் பக்கம் ஒதுங்கத் தொடங்கியுள்ளார். நாசர் இயக்கி வரும்பாப் கார்ன் படத்தில் நடித்து வரும் இவர் தற்போது மேலும் 3 தமிழ் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளாராம்.

மலையாளம் தான் எனது தாய்மொழி. அதில் தான் நான் நடிப்பேன். தமிழில் மசாலாப் படங்கள்தான் நிறையவருகிறது. அவை எனக்கு ஒத்து வராது. எனவே தமிழில் நடிப்பது கஷ்டம் என்று இதே மோகன் லால் முன்பு ஒருபேட்டியில் கூறியிருந்தார்.

இப்போது கோலிவுட்டிடம் சரண்டர் ஆகி இருக்கிறார்.

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil