»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நம் ஊர் நட்சத்திரங்கள் எவ்வளவு சம்பளம் வாங்குவார்கள் என்று தெரிந்து கொள்ள ஆசையா? கொஞ்சம் தம் பிடித்துக் கொண்டு தொடர்ந்து படியுங்கள்.

ரஜினி - இவரே படங்களைத் தயாரிப்பதால், சம்பளமாக தொகை எதுவும் பெறுவதில்லை. மாறாக, வினியோகஉரிமையை எடுத்துக் கொள்கிறார். கேரளாவில் இவர்தான் படங்களை முழுக்க முழுக்க ரிலீஸ் செய்கிறார்.தமிழகத்தில் சென்னை மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட முக்கிய ஏரியாக்களிலும் இவரே வினியோகம் செய்கிறார்.

பாபா மூலம் தென் மாநிலங்கள் முழுவதும் சொந்த வினியோகத்தில் இறங்கினார். படம் தோல்வி கண்டாலும் கூடரஜினிக்கு ரூ. 20 கோடிக்கு மேல் மிஞ்சிவிட்டது. இப்போதைக்கு தென் இந்தியாவிலேயே அதிக சம்பளம் பெறும்நடிகர் இவர்தான்.

கமல்ஹாசன் - கடைசியாக இவர் அதிக சம்பளம் வாங்கியது ஆளவந்தான் படத்திற்காகத் தான். ரூ. 8 கோடி வரைவாங்கினார். ஆனால், தொடர்ந்து பல படங்கள் சொல்லிக் கொள்ளும்படி ஓடாததால் இப்போது ரூ. 5 கோடி வரைஇறங்கி வந்து விட்டார். அத்தோடு சில ஏரியா வினியோக உரிமையை தனியாக வாங்கிக் கொள்கிறார். இதன்மூலம் சில கோடிகளை பார்த்து விடுகிறார்.

விஜயகாந்த் - தொடர்ந்து ரூ. 5 கோடி அளவில் இவரது சம்பளம் இருக்கிறது. தனது மச்சினன் பெயரில் தானேதயாரிக்கும் சொந்தப் படங்கள் மூலம் ரூ. 10 கோடி வரை ஈட்டி விடுகிறார்.

சரத்குமார் - இளம் தலைமுறை நடிகர்களை விட குறைவாகவே பெறுகிறாார். அதிகபட்சம் ரூ. 1 கோடி வரைவாங்கியுள்ளார். இப்போது சான்ஸ் இல்லாமல் வீட்டில் தான் அதிக நேரம் உள்ளார். இதனால் ரூ. 75 லட்சத்துக்குக்கூட இவரைப் பிடித்துப் போட்டுவிடலாம் என்கிறார்கள்.

விஜய் - இளம் தலைமுறை நடிகர்களில் அதிக சம்பளம் வாங்குபவர் இவர் தான். ரஜினி, கமல், விஜயகாந்த்திற்குப்பிறகு இவர்தான் அதிக சம்பளம் பெறுகிறார். ரூ. 3 கோடி வரை பெறுகிறார். பல படங்கள் ஊத்திக் கொண்டாலும்சம்பளத்தைக் குறைக்கவே இல்லை.

அஜீத் - ரூ. 2.5 கோடி வரை வாங்கினார். சில சறுக்கல்களால் வில்லனில் ரூ. 2 கோடி வாங்கினார். அடுத்ததொடர்ந்து ஹிட் படங்களைத் தரும் வரை இதே சம்பளம் தொடரும் என்கிறார்கள். அவ்வப்போது நிக் ஆர்ட்ஸ்சக்கரவர்த்தியை வைத்து தானே சொந்தப் படங்களும் எடுத்துவிட்டுக் கொண்டிருக்கிறார். இதில் ரூ. 4 கோடி வரைலாபம் பார்க்கிறார்.

விக்ரம் - ஜெமினிக்குப் பிறகு ரூ. 1.5 கோடியை தொட்டார். அதற்குப் பிறகு வந்த கிங், சாமுராய் ஊத்திக்கொண்டதால் இப்போது மீண்டும் ஒரு கோடிக்கு இறங்கி வந்து விட்டார். பிதாமகனை நம்பியுள்ளார், மீண்டும்சம்பளத்தை ஏற்ற.

மாதவன் - மின்னலேவுக்குப் பிறகு ரூ. 1 கோடி வரை கேட்டார். அதற்குப் பிறகு வந்த எல்லா படங்களும் கவுத்திவிட்டு விட்டதால் ரூ. 50 லட்சமாக குறைத்துக் கொண்டார். இப்போது ரன் நன்றாக ஓடியதால், மீண்டும் கோடியைஎட்டிப் பிடித்து விட்டார்.

பிரசாந்த் - அதிகபட்சமாக இவர் வாங்கிய சம்பளம் ரூ. 50 லட்சம் தான். இவர் அதிக வருமானம் ஈட்டுவதுவெளிநாட்டு கலை நிகழ்ச்சிகள் மூலம் தான்.

சூர்யா - ரூ. 40 லட்சம் வரை கேட்கிறார். கூட்டிக் கொடுக்கத் தயாரிப்பாளர்கள் தயாராக இருந்தாலும் கூட்டமறுப்பதாக சொல்கிறார்கள். பணத்தின் பின்னால் ஓடாத மிக அபூர்வமாக நடிகர்.

பெரிய தலைகள் இந்த அளவுக்குக் கேட்டுக் கொண்டிருக்கையில் ஷாம் ரூ. 25 லட்சம் வாங்குகிறாராம். வடிவேலுரூ. 30 லட்சம் வரை கேட்கிறார். விவேக்கின் சம்பளம் ரூ. 30 லட்சத்தில் இருந்து ரூ. 20 லட்சமாகிவிட்டது.கருணாஸின் சம்பளம் ரூ. 5 லட்சம்.

நடிகைகள் சம்பளம்:

சிம்ரன்- நடிகைகளில் தொடர்ந்து அதிக சம்பளம் கேட்பவர் இவர் தான். ரூ. 50 லட்சம் வரை இவரது சம்பளம்செல்கிறதாம். சிங்கிள் பாட்டுக்கு டான்ஸ் என்றால் ரூ. 20 லட்சமாம்.

மீரா ஜாஸ்மின்- ஒரே ஒரு படத்தில் நடித்துள்ள இவர் கேட்கும் சம்பளம் ரூ. 20 லட்சம்.

ஜோதிகா- ஜோதிகா ரூ. 50 லட்சம் வரை வாங்கியவர் தான். இப்போது ரூ. 20 லட்சத்துக்கும் அதை விடக்குறைவான பணத்துக்கும் நடிக்க ரெடி என்கிறார்.

கிரண்- கிரணின் சம்பளம் அவரது தொப்பையைப் போலவே கூடிக் கொண்டே போகிறது. இப்போது ரூ. 30லட்சத்தில் நிற்கிறார்.

ரீமா சென்- ஆந்திராவில் தான் வாங்கும் அதே ரூ. 25 லட்சத்தை தமிழிலும் கேட்கிறார்.

ஷெரீன்- துள்ளுவதோ இளமை மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்த ஷெரீன் ஷெட்டி ரூ. 20 லட்சத்தைத்தொட்டுவிட்டார்.

ஸ்ருதிகா- இவரது சம்பளம் அதற்குள் ரூ. 10 லட்சமாம்.

இந்த சம்பளம் எல்லாம் வெள்ளையில்தான். கருப்பில் எவ்வளவோ..

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil