»   »  மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை

மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

போலி பாஸ்போர்ட் வழக்கில் கைது செய்யப்பட்ட தாதா அபுசலீமின் காதலியும், நடிகையுமான மோனிகா பேடி ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

மும்பை குண்டு வெடிப்பில் முக்கிய குற்றாவளியான தாதா அபுசலீம் தனது காதலி நடிகை மோனிகா பேடியுடன் போர்ச்சுக்கல் நாட்டில் பதுங்கி இருந்த போது கைது செய்யப்பட்டார்.

பின்னர் இருவரும் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் மோனிகா பேடி மீது போலி பாஸ் போர்ட் வைத்திருத்தல் உள்ளிட்டவை தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

போலி பாஸ்போர்ட் வழக்கில் தன்னை ஜாமீனில் விடுவிக்க வேண்டும் என்று கோரி மோனிகா பேடி சார்பில், உயர்நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார். இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் அவர் மனு செய்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஜி. பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் விசாரித்து மோனிகா பேடியை ஜாமீனில் விடுதலை செய்து உத்தரவிட்டது.

இருப்பினும் பேடி மீது வேறு வழக்குகளும் இருப்பதால் அவரால் உடனடியாக வெளியே வர முடியாது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil