»   »  போலி பாஸ்போர்ட்- மோனிகா விடுதலை

போலி பாஸ்போர்ட்- மோனிகா விடுதலை

Subscribe to Oneindia Tamil

போபால்:போலி பாஸ்போர்ட் மோசடி வழக்கில் நடிகை மோனிகாபேடி இன்று விடுதலை செய்யப்பட்டார்.

உலகின் அண்டர் வேர்ல்டு தாதாவான அபு சலீமின் காதலியும், அவனின் 2வது மனைவியுமான பாலிவுட் நடிகை மோனிகா பேடி, போலி பாஸ்போர்ட்டை பயன்படுத்தி வெளிநாடு சென்றது தெரியவந்தது.

போலிபாஸ்போர்ட் வழக்கில் அபுசலீம், மோனிகாபேடி, சமீரா ஆகியோர் பல பெயர்களில் பாஸ்போர்ட் எடுத்து வெளிநாடுகளுக்கு சென்று வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதில் மோனிகாபேடி மீது போபால் போலீஸார் வழக்கு பதிவு சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு நீண்ட நாட்களாக நடந்தது. அவர் மீதான வழக்கு இன்று போபால் நீதிமன்றத்தில் தீர்ப்புக்கு வந்தது.

மோனிகாபேடி மீதான மோசடி பாஸ்போர்ட் வழக்கை விசாரித்த போபால் கோர்ட் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கு எந்தவொரு முகாந்திரமும் இல்லை என சொல்லி மோனிகாபேடியை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்ய உத்தரவிட்டது.

Please Wait while comments are loading...