»   »  மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் திரையுலக பயணம் ஒரு பார்வை

மறைந்த தயாரிப்பாளர் பஞ்சு அருணாச்சலத்தின் திரையுலக பயணம் ஒரு பார்வை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் சினிமாவில் பன்முக திறமை கொண்டவர்களின் பட்டியலில் பஞ்சு அருணாச்சலமும் ஒருவராவார். தமிழ் சினிமாவின் வசனகர்த்தா, தயாரிப்பாளர், பாடலாசிரியர், இயக்குனர் என பல திறமைகளை உள்கொண்டவர். இவர் 1941-ம் ஆண்டு காரைக்கால் மாவட்டம் சிறுகூடல் என்ற சிறிய கிராமத்தில் பிறந்தவர். திரைத்துறையில் நுழைந்தே ஆக வேண்டும் என்று வந்தவர் ஆரம்பத்தில் கவிஞர் கண்ணதாசனிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.

பின்பு 1974-ம் ஆண்டு எங்கம்மா சபதம் என்ற திரைப்படத்தின் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமானார். அதனை தொடர்ந்து 1976-ம் ஆண்டு ஒரு பாடலாசிரியாக அறிமுகமாகிய கையோடு தான் எழுதிய பாடல்களுக்கு இசையமைக்க இளையராஜாவை அறிமுகப்படுத்தினார். வசனகர்த்தா, பாடலாசிரியர், இயக்குனர் என வரிசையாக முன்னேறி வந்தவர் 1978-ல் பிரியா, என்ற வெற்றி படம் மூலம் தொடர்ந்து வெற்றி படங்களை அளிக்கும் தயாரிப்பாளராகவும் உருவெடுத்தார். இது மட்டுமில்லாமல் ரஜினி, கமல் ஆகிய இரண்டு பெரிய ஹீரோக்களுக்களின் படம் திரையில் ஒரே வேகத்தில் ஓடி வெற்றியை பெற்று தருவதில் வல்லவர்.

ரஜினி மற்றும் கமல் இருவரின் படங்கள் நூறு நாட்கள் திரையில் ஓடிக்கொண்டிருக்கும் காலம், இவ்விருவரை இணைத்து ஒரு படம் தயாரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில், இருவரிடமும் கால்ஷீட் பெற்று படத்தின் வேலைகளை தொடங்க ஆரம்பித்தார்.

Multi talented Panchu Arunachalm's cinema journey

அதே நேரத்தில், நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்தில் ரஜினியும், கமலும் நடித்துக் கொண்டிருந்தனர். அப்பொழுது கமல், ரஜினியிடம், ரஜினி நீயும் வளர்ந்துட்ட, உனக்கும் ரசிகர்கள் இருக்காங்க. நானும் ஒரு லெவலுக்கு வந்துட்டேன். அப்படியிருக்கும் பொழுது நாம் சேர்ந்து நடித்தால் சம்பளத்தை உயர்த்தி கேட்க முடியாது. உனக்கும் குறைவாகவே சம்பளம் கிடைக்கும். இதனை தவிர்க்க நாம் இனி தனித்தனியாகவே நடிக்கலாம், என்று கூறினார். இதற்கும் அப்பொழுது ரஜினியை விட கமல் ஹாஸன் அதிக சம்பளமே பெற்று வந்தார்.

இதற்கு ரஜினியும் சம்மதிக்க, இருவரும் பஞ்சு அருணாச்சலத்தை பார்த்து இனி நங்கள் சேர்ந்து நடிக்கப் போவதில்லை என்று கூறினர். உடனே பஞ்சு அருணாச்சலம் ஏழு நாட்கள் கெடுவுடன் இருவருக்கும் தனி தனி கதை எழுத ஆரம்பித்து, மின்னல் வேகத்தில் படப்பிடிப்பு முடிந்து, படங்களும் வெளியாகின. இரண்டு படங்களும் நூறு நாட்கள் ஓடிய வெற்றி திரைப்படங்கள். அந்த படங்கள் ஆறிலிருந்து அறுபது வரை மற்றும் கல்யாணராமன்.

இவ்வளவு பெரிய திறமையான படைப்பாளியாக விளங்கிய பஞ்சு அருணாச்சலம் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி முத்திரையை பதித்தவர். இவர் 100 திரைப்படங்களுக்கு மேல் எழுத்தாளராகவும், 200 திரைப்படங்களுக்கு மேல் பாடலாசிரியராகவும் பணியாற்றியுள்ளார். 80,90'களில் வெளிவந்த பெரும்பான்மையான வெற்றி திரைப்படங்களை தயாரித்தவர் என்ற பெருமையோடு இளையராஜாவை அறிமுகப்படுத்தியவர் என்ற பெருமையும் இவரை சாரும்.

இவர் கடந்த சில நாட்களாகவே உடல்நலமின்மையால், சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் இன்று சென்னை தியாகராய நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறைவனடி சேர்ந்தார். இவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இவர் மறைந்தாலும், இவரது வாரிசான சுப்பு பஞ்சு அவர்கள் தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

English summary
The Legendary producer, writer, lyricists multi talented Panchu Arunacahalm passed away on tuesday.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil