»   »  'மைசம்மா' முமைத்கான்!

'மைசம்மா' முமைத்கான்!

Posted By:
Subscribe to Oneindia Tamil
Mumaith Khan
தெலுங்கில் முமைத்கான் ஹீரோயினாக நடித்த மைசம்மா, தமிழில் காயத்ரி ஐபிஎஸ் என்ற பெயரில் டப் ஆகி வருகிறது.

தமிழில் குத்துப் பாட்டுக்கு ஆட ஆரம்பித்தவர் முமைத் கான். அவரது வேக ஆட்டம், தெலுங்குக்கும் பரவ அங்கும் குதியாட்டம் போட ஆரம்பித்தார் முமைத்.

ஆனால் முமைத்கானுக்குள் ஒளிந்திருந்த நடிப்புத் திறமையைப் புரிந்து கொண்ட தெலுங்கு திரையுலகினர் அவருக்கு ஆட்டத்தோடு நடிப்புக்கான வாய்ப்பையும் அளித்தனர். இதனால் சந்தோஷத்தோடு ஆட்டமும், நடிப்புமாக தெலுங்கைக் கலக்கி வருகிறார் முமைத்.

இந்த நிலையில்தான் அவரது அந்தஸ்தை உயர்த்தி நாயகியாக்கி அழகு பார்த்தது தெலுங்குத் திரையுலகம். மைசம்மா என்ற பெயரில் முமைத்கான் நாயகியாக நடித்த படம் அங்கு நன்றாகவே ஓடியது.

அதிரடி போலீஸ் அதிகாரியாக முமைத்கான் இப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இப்படத்தை தமிழுக்கு டப் செய்து கொண்டு வருகிறார்கள். காயத்ரி ஐபிஎஸ் என்று படத்துக்குப் பெயரும் சூட்டியுள்ளனர்.

படம் முழுக்க அதிரடியும், அணல் பறக்கும் வசனமும் நிறைந்து கிடக்கிறதாம். இதனால் காமெடிப் போர்ஷனை மட்டும் சிறப்பாக கொண்டு வரத் தீர்மானித்து விவேக் அல்லது வடிவேலுவை நடிக்க வைக்க முயற்சி நடந்து கொண்டிருக்கிறதாம்.

ஆந்திர ரசிகர்களைக் கவர்ந்த மைசம்மா, தமிழ் ரசிகர்களையும் ரசிக்க வைப்பாரா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil