»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

மும்தாஜ் இனிமேல் சிங்கிள் பாட்டுக்கு ஆட மாட்டாராம்.

முதல் படத்தில் கதாநாயகியாக நடித்த போதிலும் தன்னுடைய கவர்ச்சியை மூலதனமாக்கி ஒரு பாடலுக்கு நடித்தாலே போதும் என்று ஆட்டம் போட்டு ரசிகர்களைக் கிறங்கடித்து வந்தார் மும்தாஜ்.

ஆனால் இனிமேல் இது போன்ற சிங்கிள் பாட்டுக்கு ஆடப் போவதில்லை என்று மும்தாஜ் கூறிவிட்டார்.

கிடைத்தால் நல்ல வாய்ப்பு, இல்லாவிட்டால் இருக்கவே இருக்கு இந்தி என்ற லெவலுக்கு படு உறுதியாக உள்ளாராம்.

"ஏய் நீ ரொம்ப அழகா இருக்கே" நன்றாக ஓடிக் கொண்டிருப்பதால் ஷாம் படு சந்தோஷமாக இருக்கிறாராம். ஸ்னேகா கொடுத்த "பளாரை"க் கூட மறந்து விட்டாராம். நல்லா இருந்த சரித்தான்!

"துள்ளுவதோ இளமை"யில் இளைஞர்கள் மட்டுமல்லாது மாணவர்களின் மனதையும் தடுமாற வைத்து விட்ட ஷெரீன், காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள திட்டமிட்டுள்ளார்.

கைவசம் நிறையப் படங்கள் உள்ளதால் அது வேணும், இது வேணும் என்று ஷூட்டிங் ஸ்பாட்டிலேயே அலம்பி வருகிறாராம். தவிர, ஹீரோ முகத்தை விட தன் முகம் தான் நன்றாகத் தெரிய வேண்டும், தனக்கு நிறைய காட்சிகள் வேண்டும் என்று பட்டியலை நீட்டிக் கொண்டே போகிறாராம்.

"மும்தாஜ் பரவாயில்லைப்பா சாமி" என்று தயாரிப்பாளர்களும் இயக்குநர்களும் புலம்பி வருகிறார்களாம்.

பண மோசடி வழக்கில் போலீசார் சம்மன் மேல் சம்மன் அனுப்பிக் கொண்டிருந்த நேரத்தில் சத்தமே போடாமல் தனது மகள் திருமணத்தை நடத்தி முடித்துள்ளாராம் நடிகர் ராஜ்கிரண்.

கோலிவுட்டில் மீண்டும் கவர்ச்சி தலை காட்ட ஆரம்பித்து விட்டது. இந்த பல்ஸைப் புரிந்து கொண்ட தயாரிப்பாளர்கள் விடுவார்களா?

கன்னடத்தில் வெளியான "சூப்பர் ஆண்ட்டி" என்ற படத்தையும், வினிதா நடித்த "யோகா டீச்சர்" என்ற தெலுங்குப் படத்தையும் தூசு தட்டி தமிழ் படுத்தி விட்டார்கள்.

இரண்டு படங்களிலும் கவர்ச்சி கரைபுரண்டு ஓடுகிறதாம். "சூப்பர் ஆண்ட்டி"யாக வருபவர் அந்தக் கால குஷ்பு. "யோகா" டீச்சர் வேறு யாருமில்லை - வினிதாவேதான். கவர்ச்சிக்கு கேட்க வேண்டுமோ?

இந்திக்காரர்களே திருந்தி நல்ல படங்களாக எடுக்க ஆரம்பித்து விட்டார்கள். நம்மவர்களோ, கற்காலத்துக்கு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Please Wait while comments are loading...