»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

பழக்க தோஷம் என்பார்களே அது உண்மைதான். ஒரு பக்திப் படத்தில் நடிக்க வாய்ப்புக் கொடுத்தாலும் அடம்பிடித்து ஒரு கவர்ச்சிப் பாடலில் நடித்துள்ளார்மும்தாஜ்.

இத்தனை நாட்களாக "கபகபா" கேரக்டர்களில் நடித்து கவர்ச்சி களியாட்டம் போட்டு வந்த மும்தாஜ் முதன் முறையாக பக்திப் படமொன்றில்நடிக்கிறார்.

"திரிசூலம்" என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் நடிகர் விஜயக்குமாரின் மருமகன் ஆகாஷ் நடிக்கிறார்.

இதில் மும்தாஜுக்கு மிக முக்கியமான வேடமாம். அதுவும் இழுத்துப் போர்த்திய சேலையுடன் நடிக்கிறார்.

சேலை என்றாலே என்ன என்று தெரியாத அளவுக்கு கோடம்பாக்கத்து டைரக்டர்கள் மும்தாஜை கெடுத்து வைத்துள்ள காரணத்தால் இதில் ஒருகாட்சியிலாவது கவர்ச்சியாக நடிப்பேன் என்று அடம் பிடித்துள்ளாராம் மும்தாஜ்.

வேறு வழியில்லாமல் அவருக்காக ஒரு கவர்ச்சிப் பாடல் காட்சி சொருகப்பட்டுள்ளதாம்.

அபிதாவின் "அம்மு":

சேதுவுக்குப் பிறகு சரியான பட வாய்ப்பு கிடைக்காமல் அவதிப்பட்டு வரும் அபிதா குஜலாம்பாள் அதாங்க அபிதாவுக்கு புதிய படம் கிடைத்துள்ளது.

"ஜூனியர் சீனியர்" புகழ் அம்சவர்தன் ஹீரோவாக நடிக்கும் "அம்மு" என்ற படத்தில் அவருக்கு ஜோடியாக அபிதா நடிக்கவுள்ளார்.

பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுக்கப்படும் இந்தப் படத்தில் அபிதாவுக்கு நல்ல வேடமாம்.

சிவகங்கை கருப்பையா தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் மொத்தம் 6 பாடல்கள் வருகின்றன. இசை: தேவா. 6ல் ஒரு பாடலுக்கு ட்யூன்போட தேவா எடுத்துக் கொண்ட அக்கறையைப் பார்த்து கருப்பையா அசந்து போய் விட்டாராம்.

தேவா போட்டுக் காட்டிய மொத்தம் 75 ட்யூன்களிலிருந்து ஒரு ட்யூனை தேர்வு செய்தார்களாம். "பொண்ணு ஒன்னுநான் பார்த்தேன்..." என்ற பாடல் ஸ்டைலில் "பர்ஸ்ட் பர்ஸ்ட் பார்த்தேன்..." என்ற ரீதியில் இந்தப் பாடல்அமைந்துள்ளது. பாடலை சினேகன் எழுதியுள்ளார். தேவா தேறி விட்டாரே!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil