»   »  ரஜினிக்கு முருகதாஸ்?

ரஜினிக்கு முருகதாஸ்?

Posted By:
Subscribe to Oneindia Tamil

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் அடுத்த படம் குறித்த பேச்சுக்கள் ஆரம்பித்து விட்டன. கஜினி புகழ் ஏ.ஆர்.முருகதாஸ்தான் ரஜினியின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக பேச்சு கிளம்பியுள்ளது.

சந்திரமுகி வெளியாகி சக்கை போடு போட்டபோது, ரஜினியின் அடுத்த படத்தை யார் இயக்கப் போவது என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. அவர் இயக்கப் போகிறார், இவர் இயக்கப் போகிறார் என்று கூறி வந்த நிலையில், திடீரென ஷங்கரை கூப்பிட்டு சிவாஜியை ஆரம்பித்தார் ரஜினி.

சிவாஜியும் வெளியாகி, வசூலை அள்ளிக் குவித்து, இந்த வசூல் போதுமா, இன்னும் கொஞ்சம் வேணுமா என்று பாடாத குறையாக குவித்துக் கொண்டிருக்கிறது.

இந் நிலையில் சிவாஜிக்கு அடுத்த ரஜினியின் படம் என்ன, யார் இயக்கப் போவது, யார் தயாரிக்கப் போவது, முக்கியமாக ஜோடி போடப் போவது யார் என்ற கேள்விகள் அடுத்தடுத்து ஆர்ப்பரித்துக் கிளம்பிக் கொண்டிருக்கிறது.

திரிஷாதான் முதலில் நாயகி என்று பேச்சு கிளம்பியது. இதற்காக கால்ஷீட் புத்தகத்தை ஃப்ரீயாக்கிக் கொண்டு திரிஷாவும், போனும், காதுமாக காத்துக் கிடந்தார். ஆனால் ஒரு சத்தத்தையும் காணாததால், இப்போது பிற படங்களுக்கு கால்ஷீட் கொடுத்து வருகிறார்.

அதேபோல படத்தைத் தயாரிக்கப் போவது சத்யா மூவிஸ் என்றும், இல்லை இல்லை கே.பாலச்சந்தரின் கவிதாலாயாதான் அடுத்த தயாரிப்பாளர் என்றும் ஒரு பக்கம் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில், ரஜினியின் படத்தை இயக்கப் போகும் இயக்குநர் குறித்த வதந்திகள் ஒரு ரவுண்டு அடிக்க ஆரம்பித்துள்ளன. ஏ.ஆர்.முருகதாஸ்தான் ரஜினியின் அடுத்த பட இயக்குநர் என்பதுதான் இதில் லேட்டஸ்ட் நியூஸ்.

சிவாஜி ரிலீஸான பிறகு ரஜினியை 2 முறை சந்தித்துள்ளாராம் முருகதாஸ். 2வது முறை சந்தித்தபோது ஒரு வரிக் கதையை பாஸிடம் கூறியுள்ளார். அது ரஜினிக்காகவே முருகதாஸ் ரெடி செய்த கதையாம்.

நெசமாலுமா? என்று முருகதாஸைத் தொடர்பு கொண்டு கேட்டபோது, அய்யோ, அது ஜஸ்ட் கர்டசி விசிட்தான் சார். சூப்பர் ஸ்டார் படத்தை இயக்குவது என்பது ஒவ்வொரு இயக்குநருக்கும் கனவு. கண்டிப்பாக ரஜினி சார் படத்தை நான் இயக்குவேன். ஆனால் எப்போது என்பதை இப்போது சொல்ல இயலாது என்றார் முருகதாஸ்.

அவர் தொல்வதைப் பார்த்தால் மெய்யாலுமே என்றுதான் தோன்றுகிறது. முதலில் கஜினி, அடுத்து ரஜினியா?

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil