»   »  தமிழுக்கு முதல் மரியாதை - பூஜா

தமிழுக்கு முதல் மரியாதை - பூஜா

Subscribe to Oneindia Tamil
Click here for more images
இந்தியத் தந்தைக்கும், சிங்களத் தாய்க்கும் பிறந்தவரான பூஜாவுக்கு, தமிழ் சினிமாதான் முக்கியமாம், தமிழ் சினிமாவுக்கே தான் முக்கியத்துவம் தருவதாக கூறுகிறார் பூஜா.

சிங்களத்து சின்னக் குயிலான பூஜா, பிறந்து வளர்ந்ததெல்லாம் பெங்களூரில்தான், அவரது தாத்தா, பாட்டி மற்றும் உறவினர்கள்தான் இலங்கையில் உள்ளனர்.

பெங்களூரில் இருந்தபடி தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிப் படங்களில் நடித்து வந்த பூஜா தற்போது சிங்களத்திலும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

சில மாதங்களுக்கு முன்பு பூஜா நடித்து வெளியான அஞ்சலிகா அங்கு வெற்றி பெற்றது. சூப்பர் ஹிட் ஆன அந்தப் படத்தைத் தொடர்ந்து தற்போது இரு சிங்களப் படங்களில் நடித்துள்ளார் பூஜா. அதில் ஆசை மன் பியாங்கானா என்ற படம் சமீபத்தில் ரிலீஸாகி ஹிட் ஆகியுள்ளதாம்.

இதுகுறித்து பூஜா கூறுகையில், சிங்களப் படம் ஒன்றிற்கு ஹவுஸ் புல் போர்டு போட்டதை எனது வாழ்க்கையில் நான் பார்த்ததே இல்லை. ஆனால் எனது படங்கள் திரையிடப்பட்டுள்ள தியேட்டர்களில் ஹவுஸ் புல் போர்டுகள் போடப்படுகின்றன. இது சந்தோஷம் தருகிறது என்றார்.

தமிழில் தற்போது பூஜா நடித்து முடிந்துள்ள ஓரம்போ படம் விரைவில் ரிலீஸாகவுள்ளது. இதில் ஆர்யாவுடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது பாலாவின் நான் கடவுள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் பூஜா. அதுகுறித்து பூஜா கூறுகையில், பாலா சாரிடமிருந்து நிறைய கற்றுக் கொண்டேன். பாலா சார் போன்ற ஒரு டைரக்டரை இதுவரை நான் பார்த்ததே இல்லை. அவ்வளவு அருமையாக பணியாற்றுகிறார். இது எனது கனவு ரோல். அதை சிறப்பாக செய்து கொண்டிருக்கிறேன். எனது நடிப்பு பாராட்டு பெறும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார்.

பூஜா இப்போது தெலுங்குப் படங்களுக்கும் கால்ஷீட் கொடுக்க ஆரம்பித்துள்ளாராம். இருப்பினும் தென்னிந்திய மொழிப் படங்களில் தமிழுக்குத்தான் அதிக முக்கியத்துவம் தருவேன் என்கிறார்.

Read more about: pooja

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil