»   »  தேனப்பன் போட்ட மொட்டை!

தேனப்பன் போட்ட மொட்டை!

Subscribe to Oneindia Tamil

பொதுவாக படம் வெளி வந்த பின்னர்தான் தயாரிப்பாளர்கள் மொட்டை போட்டு கடவுளுக்கு நன்றி சொல்வது வழக்கம். சில நேரங்களில் நடிகர், நடிகைகள் சேர்ந்து தயாரிப்பாளரை மொட்டை அடிப்பதும் உண்டு.

இந் நிலையில் பாலா இயக்கும் நான் கடவுள் படத்தின் தயார்பிப்பாளர் தேனப்பன் திருப்பதி ேபாய் மொட்டை போட்டு வந்துள்ளார். ஆனால் இந்த மொட்டைக்குப் பின்னர் பெரிய கதையே நடந்துள்ளது.

பெரும் எதிர்பார்ப்புடன் கடந்த ஆண்டு பூஜை போடப்பட்ட படம் நான் கடவுள். தேனப்பன் தனது ஸ்ரீராஜகாளியம்மன் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் இப்படத்தைத் தயாரிக்க ஆரம்பித்தார் தேனப்பன். ஆனால் அவருக்குக் கிடைத்த அனுபவங்களோ படு கசப்பாகவே இருந்தது.

இந்தப் படத்தை எந்த நேரத்தில் ஆரம்பித்தார்களோ, பல சிக்கல்களை தொடர்ந்து சந்தித்துக் ெகாண்டுள்ளது.

முதலில் அஜீத், பிறகு ஆர்யா என இரு முறை ஹீேராக்கள் மாற்றப்பட்டனர். பிறகு நாயகியாக ஒப்பந்தம் ஆன பாவனா இப்ேபாது நடிக்கவில்லை என்று கூறப்படுகிறது. புதிய நாயகியைத் தேடிக் ெகாண்டிருக்கிறார் பாலா.

படத்துக்குத் திட்டமிட்ட பட்ஜெட்டில் முக்கால்வாசி அதற்குள் காலியாகி விட்டதாம். ஆனால் படமோ 10 சதவீதம்தான் ரெடியாகியுள்ளதாம். இனிமேலும் இப்படியே போனால் பெரும் நிதி சிக்கலில் சிக்கி விடுேவாம் என்பதை உணர்ந்த தேனப்பன் நஷ்டமும் இல்லை, லாபமும் இல்ைல என்ற கணக்கில், படத்தை விற்று விட முடிவு செய்தார்.

இதையடுத்து தயாரிப்பாளர் சிவஸ்ரீ சீனிவாசனிடம் நிறுவனத்திடம் பேசி படத்தை விற்று விட்டார். சில நாட்ளுக்கு முன்புதான் இதுெதாடர்பான ஒப்பந்தம் கையெழுத்தானதாம். இப்போது பிரமிட் சாய்மீரா பிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து சீனிவாசன், நான் கடவுள் படத்ைதத் தயாரிக்கவுள்ளார்.

படத்தைத் தயாரிப்பதோடு உலகம் முழுவதும் தானே நான் கடவுள் படத்தை வெளியிடவும் போகிறது பிரமிட் சாய் மீரா நிறுவனம். இதன் முக்கிய பங்குதாரர் பிரமிட் நடராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.

பெரும் பஞ்சாயத்திலிருந்து தப்பிய நிம்மதியில்தான் தேனப்பன் திருப்பதிக்குப் போய் மொட்டை ேபாட்டு திரும்பியுள்ளாராம்.

அடுத்த வாரத்திலிருந்து மீண்டும் நான் கடவுள் வளர ஆரம்பிக்கிறது. சென்னையிலும், வேலூரில் உள்ள ஒரு கோவிலும் படப்பிடிப்பை தொடருகிறார் பாலா.

அப்ப பாவனா?

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil