twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    Flashback..பொசுக்குன்னு பொங்கிய "பா".. ரோட்டோரம் நின்று.. டக்குன்னு எழுதிய புலமைப்பித்தன்!

    |

    சென்னை : எம்.ஜி.ஆர் நடித்த குடியிருந்த கோவில் திரைப்படத்தில் இடம் பெற்ற நான் யார்... நான் யார்... பாடல் உருவான விதம் குறித்தும், இப்பாடலில் உள்ள சுவாரஸ்யம் பற்றி பிளாஷ் பேக் பகுதியில் பார்க்கலாம்.

    1968ம் ஆண்டு வெளியானத் திரைப்படம் குடியிருந்த கோயில். இத்திரைப்படத்தை கே.சங்கர் இயக்கி இருந்தார்.

    பிக் பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர் தான்… கன்ஃபார்ம் ஆகிடுச்சு ! பிக் பாஸிலிருந்து இந்த வாரம் வெளியேறியது இவர் தான்… கன்ஃபார்ம் ஆகிடுச்சு !

    இப்படத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, எல்.விஜயலட்சுமி,பண்டரி பாய், எம்.என்.நம்பியார், மேஜர் சுந்தர்ராஜன், விகே ராமசாமி ஆகியோர் நடித்திருந்தார்.

    குடியிருந்த கோயில்

    குடியிருந்த கோயில்

    எம்ஜிஆர் இரட்டை வேடத்தில் நடித்த இத்திரைப்படத்தில் ஜெயலலிதா அவருக்கு ஜோடியாக நடித்திருந்தார். டபுள் ஆக்‌ஷன் படங்கள் பொதுவாகவே அனைத்து நடிகர்களுக்கும் ஹிட் கொடுக்கும் என்பதற்கேற்ப, இந்தப் படமும் எம்ஜிஆருக்கு மிகப்பெரிய ஹிட் திரைப்படமாக அமைந்தது.

    டபுள் ஆக்ஷன்

    டபுள் ஆக்ஷன்

    ஒரு எம்ஜிஆர் நல்லவர், மற்றொரு எம்.ஜி.ஆர் கெட்டவர் இது தான் ஃபார்முலா. வில்லனிடம் வளரும் எம்ஜிஆர் , அப்பாவைக் கொன்றவனிடம் வளரும் எம்ஜிஆர். இவர்கள் இருவரும் எப்படி இணைகிறார்கள் என்பதே கதை.

    ஹிட் பாடல்கள்

    ஹிட் பாடல்கள்

    மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்ற இத்திரைப்படத்தின் அனைத்து பாடல்களும் செம ஹிட். என்னைத் தெரியுமா?, நீயேதான் எனக்கு மணவாட்டி, குங்குமப்பொட்டின் மங்கலம், நான் யார் நான் யார் என எல்லாப் பாடல்களும் சூப்பர். முக்கியமாக, எம்ஜிஆரும் எல்.விஜயலட்சுமியும் ஆடுகிற ஆடலுடன் பாடலைக் கேட்டு சூப்பர் டூப்பர் ஹிட்டானது. 2கே ட்ராண்டுக்கு இந் பாடலை ரீமிக்ஸ் போட்டாலும் இன்று வரை அனைவரையும் ஆட வைத்தது இந்த பாடல்.

    நான் யார்... நான் யார்

    நான் யார்... நான் யார்

    இப்படத்தில் இடம் பெற்ற நான் யார்... நீ யார் பாடல் எப்படி உருவானது விதம் குறித்து சுவாரசியத் தகவல், குடியிருந்த கோயில் படத்தை இயக்கும் பணியில் சங்கர் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். அப்போது, புலமைப்பித்தனை எதேச்சையாக தெருவில் சந்தித்து, அப்படத்திற்காக ஒரு பாடலை எழுதித்தருமாறும் கேட்டுள்ளார்.

    தத்துவப்பாடல்

    தத்துவப்பாடல்

    பித்துபிடித்த ஒருவன் பொது வாழ்வில் நடக்கும் விஷயங்களை தத்துவமாக சொல்வது போல் பாடல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து, பேசிமுடித்த அடித்த நொடியே, தெருவோரத்தில் நின்று கொண்டு நான் யார்.. நான் யார்.. நீ யார்.. என்ற பாடலை எழுதி இருக்கிறார் புலமைப்பித்தன்.

    பொசுக்குனு பொங்கிய பா

    பொசுக்குனு பொங்கிய பா

    அறையில் எழுத வேண்டியப் பாடலை, நட்ட நெடு தெருவில், பலர் நடக்கும் வீதியில், புதுப்பானையில் பொங்குகின்ற பாலைப் போன்று, புதியப் புலவன் புலமைப்பித்தனுக்கு "பா" பொங்கி இருக்கிறது. அப்பாடல் டி.எம்.எஸ்சின் கம்பீரமான குரலில், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையில் அனைவரின் மனதையும் கவர்ந்த பாடலாகவே இன்று வரை உள்ளது.

    English summary
    Kudiyiruntha kovil movie song Naan yaar Naan yaar writer Pulamaipithan
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X