»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

எல்லா படங்களின் தோல்விக்கும் காரணம் கூற முடியும். ஆனால், சில படங்களின் வெற்றிக்கு மட்டும் காரணம் கூறமுடியாது. அத்தகைய வெற்றிப் படம்தான் ஜெயம். வித்தியாசமான கதையோ, அசத்தலான திரைக்கதையோ,பிரபலமான நட்சத்திரங்களோ இல்லாமல் களமிறங்கி வசூலை வாரிக் குவித்தது.

பெரும்பாலும் ஒரு படம் ஹிட்டானால் அதற்கு அடுத்து மளமளவென்று அட்வான்ஸ் வாங்கிக் குவிப்பதுதிரையுலகில் வழக்கம். ஆனால், ஜெயம் படத்தின் வெற்றிக்குப் பின் பல தயாரிப்பாளர்கள் சூட்கேசோடுஅலைந்தபோதும் யாரிடமும் கைநீட்டி அட்வான்ஸ் வாங்கவில்லை ரவி.

ஆனால், அந்தப் படத்தின் வெற்றியையடுத்து ஹீரோயின் சதா இரண்டு கைகளையும் முடிந்தவரை நீட்டி தமிழ்,தெலுங்கு, மலையாளம் என 15க்கும் மேற்பட்ட படங்களுக்கு அட்வான்ஸ் வாங்கி நடித்துக் கொண்டிருக்கிறார்.

பிரபல சினிமா எடிட்டர் மோகனின் மகன் தான் ரவி. பெரியவீட்டுப் பிள்ளை என்பதால் பணத்துக்கு பஞ்சம்இல்லை. இதனால் ஜெயம் வெற்றிக்குப்பின், முடிந்த வரை சுருட்ட நினைக்கமல், 8 மாதங்கள் கழித்தே ரவி தனதுஅடுத்த படத்தை ஆரம்பித்துள்ளார்.

முந்தைய படத்தைப் போலவே, எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி என்ற இந்தப் படத்தையும் அவரது அண்ணன்ராஜா இயக்க, அப்பா எடிட்டர் மோகன் தயாரிக்கிறார். ரவிக்கு ஜோடியாக மலையாளியான தெலுங்கு நடிகைஆஷின் நடிக்கிறார்.

கதாநாயகியைப் பற்றி எங்கேயும் பேச்சில்லை. ரவிக்கு அம்மாவாக நடிப்பவரைப் பற்றித்தான் கோடம்பாக்கம்முழுவதிலும் பேச்சு.

படத்தில் ரவிக்கு அம்மாவாக மகாலட்சுமியாக வருபவர் நதியா. ஒரு காலத்தில் எல்லாரையும் நதியாபைத்தியமாக்கியாக்கியவர் திடுதிடுப்பென்று அம்மா வேடத்தில் நடிக்க ஒத்துக் கொண்டது பலரையும் புருவம்உயர்த்த வைத்துள்ளது. லண்டனில் குடும்பத்துடன் வசித்து வரும் நதியாவின் கணவர் மோர்கன் அண்ட் ஸ்டான்லிசர்வதேச நிதி நிறுவனத்தில் பெரிய பதவியில் இருக்கிறார்.

இதனால் இவருக்கும் பணம் முக்கியமில்லை. தமிழிலும் மலையாளத்திலும் பல ரோல்கள் வந்தபோதும் நடிக்கமறுத்தவர் மிக நல்ல வேடம் என்பதால் அம்மாவாக நடிக்க ஒப்புக் கொண்டிருக்கிறார்.

எட்டு மாதத்தில் எண்பது கதைகளைக் கேட்டு, செலக்ட் செய்த படமாம் எம்.குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி. இதில்ஜெயம் படத்துக்கு நேரெதிராக இப்படத்தில் ரவிக்கு மாடர்ன் வேடம். குடும்ப சென்டிமெண்ட, காதல்,நகைச்சுவை கலந்து எடுக்கப்படும் இப்படத்தில் ஆக்ஷனுக்கும் முக்கியவத்துவம் கொடுத்து எடுத்து வருகிறார்கள்.

இந்தப் படத்துக்காக ரவி 5 கிலோ எடையைக் கூட்டியுள்ளாராம். இந்தப் படத்தை அடுத்து ரவி லஷ்மி மூவிமேக்கர்ஸ் நிறுவனத்துக்காக பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். அந்தப்படத்துக்கு இசை யுவன்சங்கர் ராஜா.

இதுதவிர தெலுங்கில் சக்கை போடு போட்ட, அன்னா நன்னா தமிழ் அம்மாயி, வர்ஷம் ஆகிய படங்களின்உரிமையையும் வாங்கி வைத்துள்ளார் தந்தை எடிட்டர் மோகன். அடுத்தடுத்து ரவியை வைத்து இந்தப் படங்களைஎடுக்கப் போகிறாராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil