»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாவில் மீண்டும் நதியா அலை அடிக்க ஆரம்பித்துள்ளது.

பூவே பூச்சூடவா படத்தின் மூலம் தமிழுக்கு வந்த மலையாள நதியாவுக்கு மாபெரும் வரவேற்பு கொடுத்தனர் தமிழ் மக்கள்.பெருமளவில் ரசிகர்களைப் பெற்ற நதியா தமிழக மக்களிடையே பெரும் பாப்புலர் ஆனார்.

அவர் அணிந்து வரும் சேலை, சூடிதார், தோடு, வளையல் என அனைத்தும் கவனிக்கப்பட்டன. நதியா வளையல், நதியா சேலை,நதியா தோடு என நதியாவின் பெயரை வைத்து பல பொருட்களும் விற்பனையில் சக்கை போடு போட்டன.

புதுமுகங்களின் வரவால் நதியாவுக்கு வாய்ப்புகள் குறைந்தன. அத்தோடு கல்யாணம் செய்து கொண்டு திரையுலகுக்கு குட்பைசொல்லி விட்டு லண்டன் சென்று விட்டார் நதியா.

நீண்ட இடைவெளிக்குப் பிறகு சமீபத்தில் வெளியான எம்.குமரன், சன் ஆப் மகாலட்சுமி படத்தில் ரவியின் அம்மா வேடத்தில்நதியா நடித்திருந்தார்.

அன்னைக்குப் பார்த்தது போலவே இருக்கிறாரே என்று கூறும் அளவுக்கு இன்னும் அழகை தேக்கி வைத்துள்ள நதியாவுக்குஇப்போது பட வாய்ப்புகள் அதிகம் வருகிறதாம்.

அம்மா வேடத்தில் அட்டகாசமாக நடித்துள்ளீர்கள் என்று கூறி ஐஸ் வைத்து தங்களது படத்தில் நடிக்க கூப்பிடும்தயாரிப்பாளர்களிடம் 30 லட்சம் சம்பளமாக கேட்டு அதிர வைக்கிறாராம் நதியா.

உண்மையில் அவருக்கு நிறைய படங்களில் நடிக்க விருப்பம் இல்லையாம். நல்ல வேடமாக இருந்தால் மட்டுமே மீண்டும்நடிப்பேன் என்று கூறுகிறார் நதியா.

தற்போது சத்யராஜூக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடிக்க நதியா ஒப்பந்தமாகியுள்ளார். அதேபோல் அவரது தீவிர ரசிகர் சலபதி,நதியாவை இரட்டை வேடங்களில் நடிக்க வைக்க ஒரு கதை எழுதி, நல்ல தயாரிப்பாளருக்காக காத்திருக்கிறார்.

இதற்கிடையே நதியா ஒரு பேட்டியில், குடும்ப பொறுப்புகள் காரணமாகவே சினிமாவில் தொடர்ந்து நடிப்பதில் நான் அதிகம்ஆர்வம் காட்டவில்லை. இருந்தாலும் லண்டனில் டிவி செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதால், கேமரா முன்நிற்பது, மேக்கப்போடுவது இரண்டும் என்னை விட்டு விலகவில்லை.

இந் நிலையில்தான் எம்,குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதை எனக்கு பிடித்து இருந்தால்தொடர்ந்து படங்களில் நடிப்பேன். படத்தில் நான் பேசப்படும் அளவிற்கு கேரக்டர் இருக்க வேண்டும்.

சாதாரணமாக அம்மா, அக்கா கேரக்டர்களில் வந்து போவதில் எனக்கு விருப்பமில்லை என்று தெளிவாக சொல்கிறார்.

Please Wait while comments are loading...