»   »  நடிகர் சங்கத் தேர்தல்... இயக்குநர்கள் சங்கம் நடுநிலை வகிக்கும்! - விக்ரமன்

நடிகர் சங்கத் தேர்தல்... இயக்குநர்கள் சங்கம் நடுநிலை வகிக்கும்! - விக்ரமன்

Posted By:
Subscribe to Oneindia Tamil

டிகர் சங்கத் தேர்தலில் இயக்குநர்கள் சங்கம் நடுநிலை வகிக்கும் என அச்சங்கத்தின் தலைவர் விக்ரமன் அறிவித்துள்ளார்.

Directors Union changed its stand in Nadigar Sangam and now it wants to keep neutrality between Vishal and Sarathkumar teams.

நாளை ஞாயிற்றுக்கிழமை நடிகர் சங்கத் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்தத் தேர்தலில் கலைப்புலி தாணு தலைமையிலான தயாரிப்பாளர் சங்கம் ஒருதலைப் பட்சமாக சரத்குமார் அணியை ஆதரிப்பதாக அறிவித்துள்ளது.

இந்த நிலைப்பாட்டை பெரும்பான்மையான தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் எதிர்த்துள்ளனர்.

அதே நேரம், தாங்களும் சரத்குமார் அணியை ஆதரிக்கப் போவதாக இயக்குநர்கள் சங்கமும் அறிவித்திருந்தது.

தேர்தலுக்கு இன்னும் 24 மணி நேரங்களே உள்ள நிலையில் இயக்குநர்கள் சங்கம் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளது.

இந்தத் தேர்தலில் எந்த அணிக்கும் தனது ஆதரவில்லை என்றும், இரு அணிகளுக்கும் பொதுவாக நடுநிலை வகிக்கப் போவதாகவும் இயக்குநர்கள் சங்கத்தின் தலைவர் விக்கிரமன் அறிவித்துள்ளார்.

குறிப்பு: விஷால் அணியின் பெரும்பான்மையானோர் தயாரிப்பாளர்களாகவும் உள்ளது குறிப்பிடத்தக்கது!

English summary
Directors Union changed its stand in Nadigar Sangam and now it wants to keep neutrality between Vishal and Sarathkumar teams.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil