»   »  நாக் ரவியின் 'ஸ்கோர்'

நாக் ரவியின் 'ஸ்கோர்'

Subscribe to Oneindia Tamil


தமிழ்த் திரையுலகில் தயாராகும் சிறு மற்றும் குறும்படத் தயாரிப்பாளர்களின் ஆபத்பாந்தவனாகத் திகழும் நாக் ரவி தனது இன்சைட் மீடியா நிறுவனத்தின் முதலாமாண்டு விழாவை சிறப்பாக கொண்டாடினார். இந்த நிழ்ச்சியில் அவரது நிறுவனத்தின் இதழான 'தி ஸ்கோர்' பத்திரிக்கையும் வெளியிடப்பட்டது.

Click here for more images

நாக் ரவியை தமிழ் ரசிகர்களுக்கு ரொம்ப நன்றாகத் தெரியும். நடிகை சிநேகாவுக்கும் இவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்ததாகவும், அதுதொடர்பான படங்களும் வெளியாகி சில மாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தின.

இந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் நாக் ரவி தமிழ் திரையுலகில் தனது முத்திரையைப் பதித்தார். தமிழ் சினிமாவில் சிறு மற்றும் குறும்படத் தயாரிப்பாளர்களின் ஆபத்பாந்தவனவாக திகழ்கிறார் நாக்ரவி.

படத்தை முடிக்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கும் தயாரிப்பாளர்களுக்கு படத்தை முடிக்க பைனான்ஸ் செய்வதோடு, படத்தை விநியோகித்தும் கை கொடுக்கிறார் நாக் ரவி.

சமீப காலமாக திரைக்கு வந்த பல படங்களின் விளம்பரங்களில் (சிவாஜி உள்பட) இன்சைட் மீடியாவின் லோகோ இடம் பெற்றிருப்பதைக் காணலாம். அந்த அளவுக்கு கோலிவுட்டில் நீக்கமற நிறைந்து விட்டார் நாக் ரவி.

நாக் ரவியின் இன்சைட் மீடியா நிறுவனத்திற்கு உலகம் முழுவதும் கிளைகள் உள்ளன. பட விநியோகத்தில் படு பிசியாக இறுக்கிறது இந்த நிறுவனம்.

ஆரம்பித்து ஒரு வருடம்தான் ஆகிறது என்றாலும் கூட அதற்குள் விநியோகம், ஆடியோ, வீடியோ மார்க்கெட்டில் தனி முத்திரை பதித்துள்ளது இன்சைட்.

சில நாட்களுக்கு முன்பு இன்சைட் நிறுவனத்தின் முதலாமாண்டு விழாவை சென்னையில் கொண்டாடினார் நாக் ரவி. இதில் திரையுலகைச் சேர்ந்த பலரும் கலந்து கொண்டு அவரை வாழ்த்தினர். இந்த விழாவின்போது நாக் ரவி தி ஸ்கோர் என்ற தனது இதழையும் தொடங்கினார்.

Read more about: celebrates, nagravi
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil