»   »  நடிகையை மணந்தார் நாக்ரவி!

நடிகையை மணந்தார் நாக்ரவி!

Subscribe to Oneindia Tamil
Nagravi with Deepika
நாக் ரவிக்கும், நடிகை கம் முன்னாள் டிவி தொகுப்பாளினி கமல தீபிகாவுக்கும் கல்யாணம் வெகு விமரிசையாக நடந்து முடிந்துள்ளது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஸ்னேகாவுடன் இணைத்துப் பேசப்பட்டவர் நாக் ரவி. இருவருக்கும் கல்யாணம் ஆகப் போவதாகவும், திருமண நிச்சயதார்த்தம் தொடர்பான புகைப்படங்களும் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின.

ஆனால் திடீரென இந்த செய்தியையும், புகைப்படங்களையும் ஸ்னேகா மறுத்ததால் சர்ச்சை எழுந்தது. இந்த சர்ச்சை ஓய்ந்த சில மாதங்கள் கழித்து தனது சொந்த ஊரான மலேசியாவில் இருந்து சென்னைக்கு வேறு ரூபத்தில் அடியெடுத்து வைத்தார் நாக் ரவி.

சிறிய படத் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்து அவர்களைக் காக்கும் ஆபத்பாந்தவனாக மாறினார். அப்படியே பட வினியோகத்திலும் குதித்தார். சமீபத்தில் தனது இன்சைட் மீடியா நிறுவனத்தை பெரிய அளவில் சென்னையில் நிர்மாணித்தார். படத் தயாரிப்பிலும் ஈடுபடத் திட்டமிட்டிருந்தார்.

எல்லாம் நல்லபடியாக போய்க் கொண்டிருந்த நேரத்தில், மச்சக்காரன் படத்தை திருட்டு வீடியோவில் பிடிக்க முயன்றதாக கூறி பிரச்சினையில் சிக்கினார். பின்னர் அதிலிருந்தும் தப்பினார்.

இந்தப் பிரச்சினைகளுக்கு மத்தியில் திட்டமிட்டபடி, நிச்சயித்தபடி நாக் ரவிக்கும், கமல தீபிகாவுக்கும் திருமணம் நடந்தேறியுள்ளது.

கமல தீபிகா ஓரிரு படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. தற்போது விமரிசையாக கல்யாணம் முடிந்துள்ளது.

Read more about: nagravi

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil