»   »  சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்

சிரஞ்சீவிக்கு சந்திரபாபு நாயுடு ஆறுதல்

Subscribe to Oneindia Tamil
Click here for more images
மகள் காதலருடன் கல்யாணம் செய்து கொண்ட சோகத்தில் இருக்கும் தெலுங்கு மெகா ஸ்டார் சிரஞ்சீவியையும், அவரது மனைவியையும், முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று ஆறுதல் கூறினார். அவரிடம் கண்ணீர் விட்டு அழுதுள்ளார் சிரஞ்சீவி.

சிரஞ்சீவியின் மகள் ஸ்ரீஜா, தனது காதலர் சிரீஷ் பரத்வாஜுடன் ரகசியக் கல்யாணம் செய்து கொண்டு தலைமறைவாக இருக்கிறார். தனது தந்தையால் உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறி டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கலும் செய்தார். அதை ஏற்ற நீதிமன்றம், ஸ்ரீஜாவுக்கு பாதுகாப்பு அளிக்க உத்தரவிட்டுள்ளது. சிரஞ்சீவிக்கும் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தனது மகளை மன்னித்து விட்டதாகவும், அவரது திருமணத்தை அங்கீரித்து விட்டதாகவும், எங்கிருந்தாலும் மீண்டும் வீட்டுக்கு திரும்பி வர வேண்டும் எனவும் ஆந்திர பத்திரிக்கைகள் மூலம் சிரஞ்சீவி வேண்டுகோள் விடுத்துள்ளார். இருப்பினும் இன்னும் கூட மகள் தந்த அதிர்ச்சியிலிருந்து சிரஞ்சீவ மீளவில்லை. எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருக்கிறார். சிரஞ்சீவியின் குடும்பத்தினர் பெரும் சோகத்திலும், அவமானத்திலும் கூனிக் குறுகிப் போயுள்ளனர்.

பெரும் சோகத்தில் இருக்கும் சிரஞ்சீவி குடும்பத்தினரை திரையுலகினரும், அரசியல்வாதிகளும் சந்தித்து ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், சிரஞ்சீவியை ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு, தனது மனைவி புவனேஸ்வரியுடன் சென்று சந்தித்தார். என்.டி.ராமராவின் மகள்தான் புவனேஸ்வரி. அவரும் சிரஞ்சீவியின் மனைவி சுரேகவும் நீண்ட நாளைய தோழிகள் என்பது குறிப்பிடத்தக்கது.

நாயுடுவையும், புவனேஸ்வரியையும் பார்த்த சிரஞ்சீவி தம்பதியினர் கண்ணீர் விட்டு அழுதுள்ளனர். அவர்களைத் தேற்றிய நாயுடுவும், சுரேகாவும் எப்படி ஆறுதல் சொல்வது என்று தெரியாமல் சில நிமிடங்கள் அமைதியாக இருந்தனராம்.

Read more about: sirija

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil