»   »  நச் நமீதா பாலாஜி பிரபு!

நச் நமீதா பாலாஜி பிரபு!

Subscribe to Oneindia Tamil

அஜீத் நடிப்பில் உருவாக்கப்படும் பில்லா ரீமேக்கில், ரஜினியின் பில்லாவில் பாலாஜி நடித்த காவல்துறை அதிகாரி வேடத்தில் பிரபு நடிக்கவுள்ளார்.

மை நேம் இஸ் பில்லா என்று அடிக்குரலில் எஸ்.பி.பி. கத்த, பெல் பாட்டம் பேண்ட் வடக்கும் தெற்குமாக ஓட, பஸ் கண்ணாடி சைஸில் ஆன கூலிங்கிளாஸ் கண்களை கவ்வ, ரஜினி ஆடிப் பாடி அசத்திய பில்லா இப்போது அஜீத் நடிக்க பில்லா 2007 என்ற பெயரில் ரீமேக் ஆகிறது.

இப்படத்தில் அஜீத்துக்கு ஜோடியாக நயனதாரா நடிப்பது தெரிந்த சமாச்சாரம். இப்போது அப்படத்தில் நடிக்கும் மேலும் சிலர் குறித்த தகவல்கள்வெளியாகியுள்ளன.

நச் நமீதாவும், பிரமாண்ட பிரபுவும் படத்தில் சேர்ந்துள்ளனராம். ரஜினியின் பில்லாவில் டிஎஸ்பி வேடத்தில் பழம்பெரும் நடிகர், தயாரிப்பாளர்பாலாஜி நடித்திருப்பார். அவரது வேடத்தில்தான் இப்போது பிரபு நடிக்கப் போகிறார்.

பில்லாவை தயாரித்தது பாலாஜிதான், ரீமேக்கையும் அவர் சார்பில் ஆனந்தா பிலிம்ஸ் சுரேஷ் தயாரிக்கிறார்.

ரஜினியின் ஜோடியாக, கலக்கிய ஸ்ரீபிரியா வேடத்தில் நயனதாரா ஜொலிக்கவுள்ளார். இந்த வாய்ப்பை அவர் அஜீத்தை போனில் பிடித்து, வேண்டிவிரும்பிப் பெற்றதை ஏற்கனவே தெளிவாகச் சொல்லியுள்ளோம்.

பிரவீணா நடித்த வேடத்தை யாரை விட்டு அசத்தலாம் என்று யோசித்தபோது நமீதா நினைவுக்கு வந்துள்ளார். அவரை அணுகி ரெடியா என்றுகேட்க அவரும் ஜாலியாகி ஓ.கே. சொல்லி விட்டாராம்.

நமீதா படத்தில் இருப்பதால் படம் இப்போதே களை கட்டத் தொடங்கி விட்டது. நமீதா போதாதென்று, மயங்க வைக்கும் முமைத் கானையும்பிடித்துப் போட்டுள்ளனர். ஒத்தப் பாட்டுக்கு ஒசத்தியான ஒரு குத்தாட்டத்தைப் போடவுள்ளார் முமைத்.

மேஜர் சுந்தரராஜன் நடித்த போலி சிபிஐ அதிகாரி வேடத்தை பிரகாஷ் ராஜ் செய்யவுள்ளார். அதாவது பிரகாஷ் ராஜ்தான் இப்படத்தின் வில்லன்.

படத்தை இயக்கப் போவது அறிந்தும் அறியாமலும், பட்டியல் வெற்றிப் படங்களின் இயக்குநர் விஷ்ணுவர்த்தன். ஒரிஜினல் பில்லாவில் இடம்பெற்ற மை நேம் இஸ் பில்லா, வெத்தலையைப் போட்டேண்டி ஆகிய பாடல்களை ரீமிக்ஸ் செய்யும் திட்டம் உள்ளதாம்.

முக்கிய கேரக்டர்களுக்கு ஆளெடுப்பு முடிந்து விட்டதால் ஏப்ரல் முதல் வாரத்தில் பூஜையைப் போட்டு சட்டுப் புட்டென்று படப்பிடிப்பைதொடங்கவுள்ளனராம்.

படத்தை எடுங்க நல்லா!

Read more about: namitha in billa 2007, prabhu

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil