»   »  கமல் வாபஸ்-நமீதா கவலை

கமல் வாபஸ்-நமீதா கவலை

Posted By:
Subscribe to Oneindia Tamil

சரண் இயக்கத்தில் நடிப்பதாக இருந்த படத்திலிருந்து கமல்ஹாசன் விலகிக் கொண்டதால், நமீதா ரொம்பவே விசனத்தில் இருக்கிறாராம்.

கமலும், சரணும் இணைந்து வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற அட்டகாச வெற்றிப் படத்தைக் கொடுத்தனர். இதையடுத்து மீண்டும் ஒரு படத்தில் இணைய இருவரும் திட்டமிட்டிருந்தனர்.

இப்படத்தை சரணே தயாரித்து, இயக்குவதாக கூறப்பட்டது. ஆனால் திடீரென கமலிடம் கூட சொல்லாமல் தயாரிப்பிலிருந்து விலகிக் கொண்டு லண்டன் கருணாஸ் என்பவரிடம் தயாரிப்பு பொறுப்பை ஒப்படைத்தார் சரண்.

இதனால் கடுப்பான கமல், சரண் படத்திலிருந்து விலகி விட்டார். இதனால் சரணை விட கவலையில் இருப்பது நமீதா தானாம்.

சரண் படத்திலிருந்து கமல் விலகியதற்கு நமீதாவுக்கு ஏன் கவலை என்று கேட்கலாம்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நமீதாவிடம் பேசியிருந்தாராம் சரண். முறைப்படி அறிவிக்கும் வரை இந்த செய்தியை கமுக்கமாக வைத்திருக்குமாறும் கூறியிருந்தார். இதனால் கமல் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற சந்தோஷத்தில் இருந்தார் நமீதா.

கமலுடன் நடித்து விட்டால் அடுத்து ரஜினியுடனும் எப்படியாவது ஜோடி போட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த நமீதாவுக்கு, கமல் திடீரென படத்திலிருந்து விலகி விட்டதால் அப்செட் ஆகி விட்டதாம்.

சரண் படத்திலிருந்து கமல் விலகியதற்கு நமீதாவுக்கு ஏன் கவலை என்று கேட்கலாம்.

இப்படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க நமீதாவிடம் பேசியிருந்தாராம் சரண். முறைப்படி அறிவிக்கும் வரை இந்த செய்தியை கமுக்கமாக வைத்திருக்குமாறும் கூறியிருந்தார். இதனால் கமல் படத்தில் நடிக்கப் போகிறோம் என்ற சந்ேதாஷத்தில் இருந்தார் நமீதா.

கமலுடன் நடித்து விட்டால் அடுத்து ரஜினியுடனும் எப்படியாவது ஜோடி போட்டு விடலாம் என்ற நம்பிக்கையில் இருந்த நமீதாவுக்கு, கமல் திடீரென படத்திலிருந்து விலகி விட்டதால் அப்செட் ஆகி விட்டதாம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil