»   »  அச்சக் ஆசின், நச்சக் நமீ

அச்சக் ஆசின், நச்சக் நமீ

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஆப்பிள், பப்பாளி, அண்ணாசி. இந்த மூன்று பழங்களையும் சேர்த்தக் கலக்கி மடக்மடக்கென குடித்தால் எப்படி இருக்கும் அண்ணாச்சி? அப்படி ஒரு சூப்பர்டேஸ்ட்டான ஒரு படம் மலையாளத்தில் தயாராகிறது.

ஆசின்தான் அந்த ஆப்பிள், நமீதாதான் அந்த பப்பாளி, நிகிதாதான் அண்ணாசி. இந்தமூன்று கன்னிகளும் சேர்ந்து மலையாளத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளனர்.படத்திற்குப் பெயர் கார்த்திகை திருநாள் கார்த்திகேயன்.

ஆசின்தான் படத்தோட நாயகியாம். ஹீரோவாக மோகன்லால் நடிக்கிறார். நமீதாவுக்குமிக முக்கிய வேடமாம். நிகிதாவுக்கும் பேசும்படியான கேரக்டராம்.

ஆசின் நீண்ட இடைவெளிக்குப் பிறகு நடிக்கும் நேரடி மலையாளப் படம் இது. அதைவிட முக்கியம் ஆசின் நடிக்கும் 2வது மலையாளப் படம் இது என்பதுதான்.

ஆசின் முதலில் நடித்த படம் நரேந்திரன் மகன் ஜெயகாந்தன். குஞ்சாக்கோபோபனுக்கு ஜோடியாக நடித்த இப்படம் சுமாராகத்தான் ஓடியது. அதன் பிறகு அவர்தெலுங்குக்குப் போய் விட்டார். அப்படியே தமிழுக்கும் தாவி விட்டார்.

அதன் பின்னர் மலையாளப் படங்களுக்கு அவர் போகவே இல்லை.இந் நிலையில் அவரது தாய் மொழிப் பட வாய்ப்பு அவரைத் தேடி வந்தது.மோகன்லால் ஹீரோ என்பதால் ஓ.கே. சொல்லி விட்டார். சுரேஷ்பாபு இப்படத்தைஇயக்குகிறார்.

நமீதாவுக்கு இதில் கிளாமர் வேடம் என்று சொல்லியுள்ளார்களாம். அதைத் தவிர வேறுஎப்படி நடிப்பதாம் என்று செல்லமாக சிணுங்கிக் கொண்டே வாய்ப்பை ஏற்றுக்கொண்டாராம் நமீ.

நிகிதா தமிழ், தெலுங்கு என எங்குமே பிரேக் கிடைக்காமல் தத்தளித்து வருகிறார். இந்நிலையில் கார்த்திகை திருநாள் மூலம் தனது அதிர்ஷ்டத்தை மலையாளத்தில்பரீட்சித்துப் பார்க்கப் போகிறார்.

மூன்று கனிகளையும் ஒரே தட்டில் வைத்துக் கொடுக்கிறார்கள். மலையாள ரசிகர்கள்கொடுத்து வைத்தவர்கள்தான்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil