»   »  ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் ஊட்டி, முத்தமிட்டு பிறந்த நாளைக் கொண்டாடிய நமீதா!

ஆதரவற்ற குழந்தைகளுக்கு கேக் ஊட்டி, முத்தமிட்டு பிறந்த நாளைக் கொண்டாடிய நமீதா!

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: புரசைவாக்கத்தில் உள்ள ஆதரவற்ற மாணவர்களுக்கான பள்ளியில் நேற்று தன் பிறந்த நாளைக் கொண்டாடினார் நடிகை நமீதா.

திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்ட கையோடு சென்னை திரும்பிய நமீதா, மாலையில் அருண் ரெயின்போ என்னும் சேவை அமைப்பினர் நடத்தும் அந்தப் பள்ளிக்குச் சென்றார்.

இருக்க இடம்.. பாதுகாக்க பெற்றோர் என யாருமற்ற இந்தக் குழந்தைகளுடன் தன்னால் முடிந்த அளவுக்கு நேரத்தைச் செலவு செய்தார்.

கேக் ஊட்டி, முத்தம் கொடுத்து

கேக் ஊட்டி, முத்தம் கொடுத்து

ஆதரவற்ற குழந்தைகளோடு ஒரு குழந்தையாய் மாறி, அவர்களுக்கு மத்தியில் போய் அமர்ந்து ஒவ்வொரு குழந்தைக்கும் கேக்கை ஊட்டி மகிழ்ந்தார். தனக்கு வாழ்த்து அட்டைகளைப் பரிசளித்த குழந்தைகளை முத்தமிட்டு நன்றி கூறினார்.

விரும்பிய உணவு

விரும்பிய உணவு

இந்தக் குழந்தைகளுக்கு பிடித்தமான இரவு உணவு என்ன என்று முந்திய நாளே கேட்டு, அதை தனது மேனேஜர் ஜான் மூலம் வரவழைத்தார். தனது கையால் அத்தனை மாணவர்களுக்கும் வழங்கியவர், அவர்கள் சாப்பிட்டு முடியும் வரை உடனிருந்து, 'உணவு நன்றாக இருந்ததா?' என்பதை உறுதி செய்த பிறகே கிளம்பினார்.

திருப்தி

திருப்தி

"பிறந்த நாள் என்பதை பிறருக்கு உதவும் நாளாக மாற்றிக் கொண்டேன். சினிமாவில் நான் எவ்வளவு சம்பாதித்தாலும் இப்படி பிறந்த நாள் கொண்டாடுவதுதான் எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

சென்னைவாசி..

சென்னைவாசி..

நான் இனி எப்போதும் சென்னைவாசிதான். தமிழ் நாட்டு மக்களுக்கு என்னால் முடிந்த சேவைகளை மனப்பூர்வமாகச் செய்வேன்," என்றார் நமீதா.

English summary
Actress Namitha has celebrated her birthday at an orphanage in Chennai

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil