»   »  நடிகர் மனோஜுக்கு பெண் குழந்தை

நடிகர் மனோஜுக்கு பெண் குழந்தை

Subscribe to Oneindia Tamil
Nandana with Manoj

இயக்குநர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. கேரளாவில் உள்ள மருத்துவமனையில் மனோஜின் மனைவி நந்தனா குழந்தையைப் பெற்றெடுத்தார்.

நடிகர் மனோஜுக்கும், நடிகை நந்தனாவுக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. விமரிசையாக நடந்த திருமணத்திற்குப் பின்னர் நந்தனா கர்ப்பம் தரித்தார். இதையடுத்து தனது தாய் வீடான கோழிக்கோட்டுக்குச் சென்றார்.

அங்கு நேற்று அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து அங்குள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு பிற்பகலில் அழகான பெண் குழந்தை பிறந்தது.

Please Wait while comments are loading...