»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நீண்ட நாட்களுக்குப் பின் மீண்டும் தமிழுக்கு வருகிறார் நந்திதா தாஸ். அழகி படத்தில்உள்ளங்களைக் கொள்ளை கொண்ட நந்திதா, இம்முறை மம்மூட்டிக்கு ஜோடியாக விஷ்வதுளசிஎன்ற படத்தில் நடித்து முடித்திருக்கிறார்.

படத்தை இயக்கியிருப்பது அமெரிக்காவில் வசித்து வரும் சுமதி ராம். கோவையைச் சேர்ந்த இவர்கணவருடன் அமெரிக்காவில் வசித்தபோது உருவாக்கிய கதை தான் விஷ்வதுளசி. 1962ம்ஆண்டில் நடக்கும் சம்பவம் தான் கதை.

ஒரு வருடத்தில் நடந்தேறும் சம்பவங்களை கதையாக்கி, படத்தை சத்தம்போடாமல் இயக்கியும்முடித்துவிட்டார் சுமதி. இத்தனைக்கும் சினிமா பற்றி எந்த முன் அனுபவமும் இல்லாதவராம்.

மம்மூட்டிக்கு இதில் ஜமீன்தார் வேடம். அந்த கிராமத்தில் தமிழ் சொல்லித் தரும் வாத்தியாரின்மகளாக வருகிறார் நந்திதா. வாலிபம் தாண்டிய மூத்த வயதில் இந்த இருவருக்கும் இடையே பூக்கும்காதல் தான் கதைக் கருவாம்.

காதலை இருவரும் பகிர்ந்து கொள்ளாமல், அதே நேரத்தில் இருவரும் அந்தக் காதலுக்காகவேவாழ்ந்து முடியும் எமோஷனல் தட்டுத் தடுமாற்றங்கள் நிறைந்த படைப்பாக உருவாக்கியிருக்கிறாராம்சுமதி.

அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கிறது இந்தப் படம். கதை தான் சிம்பிளே தவிர, அதிகமானபொருட் செலவில் படத்தை பிரமாண்டமாகவே உருவாக்கியிருக்கிறார் சுமதி. இந்தப் படத்துக்காகசிந்துளா பிலிம்ஸ் என்ற பட நிறுவனத்தையும் ஆரம்பித்திருக்கிறார்.

சென்னை, கேரளா, பொள்ளாச்சி என சூட்டிங்கை பல பகுதிகளிலும் நடத்தி முடித்திருக்கிறார்கள்.இந்தப் படத்தின் இன்னொரு ஸ்பெஷாலிட்டி மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனும்,இசைஞானி இளையராஜாவும் இணைந்து இசையமைப்பது தான்.

படத்துக்கான அனைத்து பாடல்களையும் இளையராஜாவே எழுதியிருக்கிறாராம்.

இதில், மணிவண்ணன், டெல்லி கணேஷ், இளவரசு என நட்சத்திர பட்டாளமும் நடித்திருக்கிறது.

Read more about: ar rahman, cinema, diya, music, nandhitha dass, songs

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil