»   »  ஊர் திரும்பும் நவ்யா

ஊர் திரும்பும் நவ்யா

Subscribe to Oneindia Tamil

மாயக்கண்ணாடிக்குப் பிறகு தமிழில் வாய்ப்புகள் சரிவர இல்லாததால் நவ்யா நாயர் மீண்டும் மலையாளத்துக்கேத் திரும்புகிறார்.

மலையாளத்தில் படு பிசியாக, கை நிறையப் படங்களுடன் முன்னணியில் இருந்தவர் நவ்யா நாயர். அந்த நிலையில்தான் அழகிய தீயே மூலம் தமிழுக்கு வந்தார்.

முதல் படம் நன்றாக இருந்தும் பெரிய அளவில் ஓடாததால் நவ்யாவுக்கு உடனடியாக தமிழில் வாய்ப்புகள் வந்து விடவில்லை. இந்த நிலையில்தான் தங்கர் பச்சானின் சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி படம் வந்து நவ்யாவைத் தூக்கி விட்டது.

இதைத் தொடர்ந்து தமிழில் நடிக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் மலையாளத்தில் சுத்தமாக நடிப்பதை நிறுத்தியிருந்தார் நவ்யா. அவர் நடித்த படங்கள் அடுத்தடுத்து வெளியாகி வந்த நிலையில் மாயக்கண்ணாடி வந்து கவிழ்த்தி விட்டு விட்டது.

மாயக்கண்ணாடி தோல்விப் படமானதால் நவ்யாவின் நிலை கேள்விக்குறியாகி விட்டது. மேலும் பெரிய உயரத்திற்குப் போகலாம் என்று நினைத்திருந்த அவரது கனவு தகர்ந்து விட்டது.

இந்த நிலையில் தற்போது புதிதாக 3 மலையாளப் படங்களில் புக் ஆகியுள்ளார் நவ்யா. தமிழில் 2 படங்கள் உள்ளனவாம். இனிமேல் மலையாளத்திலும் தீவிரமாக கவனம் செலுத்த முடிவு செய்துள்ளார் நவ்யா.

தமிழில் கண்கள் மறப்பதில்லை படத்தில் நடித்து வருகிறார் நவ்யா. இந்தப் படத்தில் அவருக்கு நல்ல கேரக்டர் கொடுத்துள்ளாராம் இயக்குநர் ஜெயராஜ். இவரும் மலையாளம்தான்.

இந்தப் படத்தில் நவ்யாவுக்கு இரட்டை வேடம். திரில்லர் கதையான இது தமிழில் ஹிட் ஆகும் என்ற நம்பிக்கையில் உள்ளார் ஜெயராஜ்.

இதுதவிர கன்னடத்திலும் சில படங்களில் நடிக்கவுள்ளார் நவ்யா. மொழி மாறிப் பறப்பதன் காரணம் குறித்து நவ்யாவிடம் கேட்டபோது,

மொழி குறித்து எனக்குப் பிரச்சினை இல்லை. எனக்கு எல்லாப் படங்களுமே ஒன்றுதான். தமிழில் எனக்கு போதிய படங்கள் இல்லை என்று சொல்வதை ஏற்க மாட்டேன். செலக்டிவ்வாகத்தான் படங்களை தேர்வு செய்கிறேன் என்றார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil