»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழில் முக்கிய இடத்தைப் பிடிப்பதில் இப்போது மலையாள நடிகைகள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது.

மும்பை இறக்குமதிகள் கொஞ்சம் குறைந்துவிட்ட நிலையில் கன்னடத்தில் இருந்து சாயா சிங், ரக்ஷிதா என பலர்வந்தனர்.

ஆனால், இப்போது கேரள நடிகைகள் தான் அதிகப் படங்களில் நடித்து வருகின்றனர்.

மீரா ஜாஸ்மின், நவ்யா நாயர், ஸ்ரீதேவிகா, நந்தனா, பிரணாதி என மலையாளத்தில் இருந்து தமிழுக்கு வந்துகொண்டுள்ள நடிகைகளின் பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இது தவிர விருமாண்டி வெளியானால்இன்னொரு மலையாள நடிகையான அபிராமியும் செகண்ட் இன்னிங்ஸை ஆரம்பிப்பார் என்கிறார்கள்.

தமிழ் டிவிக்களில் நடிக்கும் பெரும்பாலான நடிகைகளும் கேரளத்தை சேர்ந்தவர்கள் தான்.

இப்போதைக்கு மீரா ஜாஸ்மீன் முன்னணியில் இருந்தாலும், விரைவில் அந்த இடத்தை ஆக்கிரமிக்க நவ்யாவும்,ஸ்ரீதேவிகாவும் போட்டியில் இறங்கலாம்.

நவ்யா நாயர் இப்போது பிரகாஷ் ராஜ் தயாரிக்கும் படத்தில் நடித்து வருகிறார். முதலில் கூத்துப் பட்டறை எனநல்ல தமிழில் இதற்கு பெயர் வைக்கப்பட்டது. பின்னர் அது எல்லாமே டிராமா தான் என ஜனரஞ்சகமாகமாறியது.

இப்போது இதன் பெயர் அழகியே தீயே என கவிதைத்தனமாக மாறிவிட்டது.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil