»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

ஐயா, சந்திரமுகி நாயகி நயனதாரா நடிக்கும் புதுப் படத்துக்கு "36-28-36" (அப்படீன்னா இன்னான்னு தெரியும்ல!) என்று பெயர்வைக்கப்பட்டுள்ளது.

இதில் அவருக்கு ஜோடியாக நடிக்கப் போவது இயக்குனர் கம் நடிகர் எஸ்.ஜே.சூர்யா தான்.

ஐயாவில் அறிமுகமாகிய இந்த கேரளத்து வல்லிய குட்டிக்கு எடுத்த எடுப்பிலேயே சூப்பர் ஸ்டார் படத்திலும் நடிக்க வாய்ப்புகிடைத்துவிட்டது.

கேரளாப் பக்கம் போனால், இவரை வேடிக்கை பார்க்க பெருமளவில் ஆட்கள் திரண்டுவிடுகிறார்களாம். ரஜினியுடன் நடிப்பது குறித்துஏராளமாய் கேள்வி கேட்கிறார்களாம்.

இதை ரொம்ப பெருமையாக சொல்லும் நயனதாராவின் அழகில் ரஜினியும் சொக்கியிருக்கிறார். நீ ரொம்ப அழகா இருக்கே என்று திரும்பத்திரும்பச் சொன்னதோடு, இவருக்காக நிறைய காட்சிகளை சேர்க்கவும் வைத்தாராம்.

கேரளத்து அழகிகளுக்குத்தான் இப்போது கோடம்பாக்கத்தில் வாழ்க்கை என்ற அடிப்படை உண்மை நிலவரப்படி, நயனதாராவும் அதிவேகமாகவே முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்.

அடுத்து சிம்புவுடன் நடிக்க அட்வான்ஸ் வாங்கிவிட்ட நயனதாரா, தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யாவுடன் 36-28-36 படத்தில் நடிக்கப்போகிறார்.

இரண்டு பேரும் சேர்ந்து ஜோடி போட்டுள்ள படத்தின் பெயரே வில்லங்கமாக இருப்பதால் கதையிலும் வில்லங்கம் விரவிக் கிடக்கும் என்றுஎதிர்பார்க்கிறார்கள்.

சூர்யா, இயக்கி நடித்த நியூ படத்தின் வினியோகஸ்தரான லக்ஷ்மண் தான் இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். நியூ படத்தில் வாரிய பணத்தைஅப்படியே இதில் கொட்டுகிறார்.

தமிழ்வாணன் என்பவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கப் போகிறார். அடுத்தவர் இயக்கத்தில் சூர்யா நடிக்கப் போகும் முதல் படம்இதுவே. இதில் ஹீரோவாக மட்டும் செயல்படப் போகிறாராம். டைரக்ஷன் பக்கம் தலையிடப் போவதில்லையாம்.

எனது வேலை நயனதாராவுடன் டூயட் பாடுவது, வில்லன்களைப் போட்டு அடித்து தள்ளுவது, டான்ஸ் ஆடுவது இவை மட்டுமே என்கிறார்புன்னகையுடன் சூர்யா.

யுவன் ஷங்கர் ராஜாதான் இசையாம்.

படத்தை அடுத்த மாதம் போல பூஜை போட்டுத் துவக்கி விட்டு அப்படியே இலங்கை, நியூசிலாந்து என ஒரு ரவுண்டு போகிறார்கள். அங்குபாடல்களை சுட்டு விட்டு பின்னர் கேரளாவிலும் சில காட்சிகளை பிடிக்கிறார்கள்.

படத்தின் கதை குறித்து தமிழ்வாணனிடம் கேட்டால், இது ஒரு இளமைத் திருவிழா என்கிறார்.

இவர் இயக்குனர் எழிலிடம் துள்ளாத மனமும் துள்ளும், பெண்ணின் மனதைத் தொட்டு, பூவெல்லாம் உன் வாசம், ராஜா போன்றபடங்களில் இணை இயக்குனராக பணியாற்றியவர்.

பி.எப் என்ற தலைப்பில் படம் எடுத்து நடித்து தமிழ்ப் பற்றாளர்களின் எரிச்சலுக்கு ஆளான சூர்யா, அடுத்ததாக 36-28-36 என்ற படுகுசும்பான தலைப்பில் நடிக்கப் போகிறார்.

பரபரப்பே உன் மறு பெயர் சூர்யாவா?

அப்புறம் நயனதாராவும் சும்மா இல்லை. பார்க்க அடக்க ஒடுக்கமாய் இருந்தாலும் கேமராவுக்கு முன் நல்லாவே பாய்ச்சல்காட்டிவிடுகிறார். இதனால் அவருக்கு அட்வான்ஸ் தர தயாரிப்புப் பார்ட்டிகள் பணப் பெட்டிகளை எடுத்துவிடத் தயாராக அலைகிறார்கள்.

சந்திரமுகி தெலுங்கு பதிப்பு மூலம் தெலுங்கு தயாரிப்பாளர்கள் மத்தியிலும் நயனதாராவுக்கு ஒரு கிரேஸ் வந்துவிட்டது. இதனால்அங்கிருந்தும் டேட்ஸ் கேட்டு வருகிறார்கள்.

தெலுங்கில் முதன்முதலாக ஜூனியர் என்.டி.ஆருடன் ஒரு படத்தில் நடிக்கப் போகிறார். தெலுங்கு என்பதால் காரம் கொஞ்சம் கூடவேவேண்டும் என்ற கண்டிசனுடன் தான் காசைத் தந்திருக்கிறார்கள். கேட்ட மாதிரி நடிச்சுட்டா போச்சு என்று சொல்லி ஒரு பெரியஅமெளன்டை அட்வான்ஸாக வாங்கியிருக்கிறார் நயனதாரா.

அப்படியே, சொந்த பாஷையான மலையாளத்தில் மம்மூ சேட்டாவுடன் (மம்மூட்டியை அப்படித்தான் சொல்கிறார் நயனதாரா) ஒருபடத்திலும் நடிக்கிறார்.

Read more about: nayanatara

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil