»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

நயன்தாரா...

மலையாளத்தில் இப்போது இவர் தான் ஹாட்-கேக். இளமை ராட்சசி. தனது வசீகரத்தாலும் அழகிய நடிப்பாலும் அனைவரையும்கவர்ந்திழுத்து வருகிறார்.

மலையாளத்தில் ஜெயராமுடன் மனசினக்கரே என்ற படத்தில் புதுமுகமாய் அறிமுகமாகியிருக்கிறார். படம் சூப்பட் ஹிட்.தொடர்ந்து மோகன்லாலுக்கு ஜோடியாக பாசில் இயக்கத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

எதுக்கு இப்போ மலையாளப் படவுலகப் புராணம் என்கிறீர்களா? விஷயம் இருக்கு....

முன்னணி மலையாள நடிகர்களுடன் நடிக்க பல வாய்ப்புக்கள் வந்தாலும் எப்படியாவது தமிழில் நுழைந்துவிட தீவிரமாய் முயன்றுவருகிறார் நயன்தாரா. மாடலிங்கில் இருந்தபோதே தமிழில் முயன்று பார்த்திருக்கிறார். ஆனால், சான்ஸ் கிடைக்கவில்லை.

இதனால் பிறந்த ஊரான மலையாளத்தில் முயற்சி செய்து வாய்ப்புக்கள் கிடைத்தவுடன் புக் ஆகியிருக்கிறார். இப்போது அங்கிருந்துகழன்று தமிழில் கால் பதிக்க ஆசை, ஆசையாய் காத்திருக்கிறார்.

தயாரிப்பாளர்கள், இயக்குனர்களுக்கு ஆல்பங்களை அனுப்புவதிலும், தமிழுக்காக கவர்ச்சியில் கொஞ்சம் முன்னே, பின்னே விட்டுக்கொடுத்து நடிக்கவும் தயார் என்ற தகவலை அனுப்புவதிலும் வேகம் காட்டி வருகிறார் நயன்தாரா.

விரைவில் நேரடியாகவே கோடம்பாக்கத்துக்கு வந்து சான்ஸ் வேட்டையில் இறங்கவும் திட்டமிட்டுள்ளார். மோகினி ஆட்டம்,வெஸ்ட்டர்ன் உள்பட பல வகை டான்ஸ்களிலும் இவர் எக்ஸ்பர்ட்.

அப்படியென்ன தமிழ் சினிமா மீது இந்த சேச்சிக்கு இவ்வளவு பற்று என்கிறீர்களா? எல்லாம் டப்புமா.. டப்பு.

மலையாள சூப்பர் ஸ்டார் சம்பளத்தை நம் ஊர் வடிவேலுவும் விவேக்கும் வாங்கிவிடுகிறார்களே. ஹீரோயின்களுக்கும் அள்ளித் தருவதில்நம்மவர்களுக்கு மனசு ரொம்பவே பெரிசு.

இதனால் தமிழ் சினிமா தான் நயன்தாராவின் அடுத்த குறி.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil