»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

சமூகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதில் தற்போதைய தமிழ் சினிமா, பெரும் சீரழிவை ஏற்படுத்திவருவதாக நடிகர் நாசர் வருத்தம் தெரிவித்துள்ளார்.

திருச்சி ஹோலி கிராஸ் கல்லூரியின் விஷூவல் கம்யூனிகேஷன் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சமூகமாற்றத்திற்கு சினிமா என்ற தலைப்பிலான கருத்தரங்கில் நாசர் கலந்து கொண்டு பேசினார்.

தமிழ் சினிமா எப்படி உள்ளது, அதனால் சமூகத்தில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் என்பது பற்றி விலாவாரியாக நாசர்பேசினார். அவரது பேச்சில், தமிழ் சினிமா குறித்த அவரது வேதனை வெளிப்பட்டது.

நாசரின் பேச்சு: தமிழ் சினிமாக்காரர்களின் ஒட்டுமொத்த மன நிலையே சீர்குலைந்து போய்க் கிடக்கிறது. நல்லசினிமா எடுப்பதை விட எதை காட்டினால் போணியாகும் என்ற மனநிலையில்தான் அவர்கள் படம் எடுக்கிறார்கள்.

நம்பவே முடியாத, அதீத கற்பனையுடன் கூடிய காட்சிகள்தான் இன்று தமிழ் சினிமாவை அலங்கரிக்கின்றன. நிஜம்,இயல்பு என்பது இல்லாமல் போய் விட்டது. தரம் குறைந்து விட்டது. சமூகத்தைப் பாதிக்கும் பிரச்சினைகளைசித்தரிப்பதை விட சதையை காட்டுவதில்தான் இன்றைய சினிமாக்காரர்களுக்கு ஆர்வம் அதிகமாக உள்ளது.

சிங்கப்பூர், இலங்கை போன்ற உலக நாடுகளில் சமூக பிரச்சினைகளை வெளிக்காட்டும் விதமாக படங்கள்தயாரிக்கப்படுகின்றன. நிஜ வாழ்க்கையில் மனிதர்கள் சந்திக்கும் பிரச்சினைகள்தான் அங்கு படங்களின் கதைக்களமாக உள்ளது.

ஆனால் நல்ல படங்களுக்கு தமிழகத்தில் வரவேற்பு இல்லை. ஆட்டோகிராப் போன்ற ஒரு சில படங்கள் மட்டும்விதிவிலக்காக நல்ல வரவேற்பைப் பெறுகின்றன என்றார் நாசர்.

தற்போது என்ன படத்தில் நடிக்கிறீர்கள் என்ற கேள்விக்கு, நடிகை ரேவதி இயக்கத்தில் உருவாகியுள்ள பிர்மிலங்கே என்ற இந்திப் படத்தில் நடித்துள்ளதாக நாசர் தெரிவித்தார். இந்தப் படத்தில் எய்ட்ஸ் நோயாளிகளுக்குஆதரவாக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நாசர் நடித்துள்ளார்.

பிர் மிலங்கே படத்தில் சல்மான்கான் எய்ட்ஸ் நோயாளியாக நடித்துள்ளார். ஷில்பா ஷெட்டி, அபிஷேக் பச்சன்ஆகியோரும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

Read more about: cinema, nazar, tamil cinema, tamil film
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil