»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Subscribe to Oneindia Tamil

நான் இருக்கேன்.. எதுக்கும் தயார் என்று சொல்லாமல் சொல்லிக் கொண்டு வந்திறங்கிறங்கியிருக்கிறார் ஆந்திரத்துஹீரோயின் நேகா.

காசு போட்ட தயாரிப்பாளர், இயக்கும் டைரக்டர் மனம் நோகாமல் நடந்து கொள்வதில் நேகாவுக்கு இணை அவர்தானாம். அதைத் தெரிந்தே கூட்டி வந்திருக்கிறார்கள்.

ஆந்திராவில் அறிமுகமான முதல் படத்திலேயே (படத்தின் பெயர் தில்) இவர் கட்டவிழ்த்துவிட்ட இளமையைப்பார்த்து பரவசப்பட்டுப் போய் ஆசாமி என்ற படத்தில் இவரை புக் செய்திருக்கிறார் தயாரிப்பாளர் மகேஷ்.

ஆசாமி படத்தின் ஹீரோ உதயா. இவர் திருநெல்வேலி, கலகலப்பு, ஷக்கலக்க பேபி என பல படங்களில்தொடர்ந்து துக்கடா வேடங்களில் தலைகாட்டியவர் தான். ஆனால், இந்தப் படங்கள் எல்லாமே படு பிளாப்என்பதால் இவரை தமிழ்நாட்டில் பெரும்பாலானவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

இப்போது ஆசாமி படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாகிறார். கூடவே கஸ்தூரிராஜாவின் காதல் ஜாதிபடத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் இவருக்கு ஜோடியைத் தேடி அலையோ அலை என்றுஅலைந்திருக்கிறார்கள். முன்னணியில் உள்ள யாரும் கூட நடிக்க முன் வராததால், நேகாவைஜோடியாக்கிவிட்டார்களாம்.

நடித்துள்ளவர் இவர். படத்தை இயக்கப் போவது சுரேஷ் வர்மா. இவர் ராம்கோபால் வர்மாவின்அசிஸ்டெண்ட்டாக இருந்து இப்போது ரைடக்டர் புரோமோஷன் அடைந்திருப்பவர்.

தெலுங்கில் இருந்து வந்தாலும் நேகாவுக்கு சொந்த ஊர் மும்பை. மாடலிங்கோடு சினிமா ஆசையும் பீறிடகிளுகிளு.. குளுகுளு ஸ்டில்கள் எடுத்து ரவுண்டுக்கு விட்டு சான்ஸ் பிடித்தவர் தான்.

அவரை நாம் சந்தித்தபோது, தமிழ்ப் படத்தில் நடிப்பது ரொம்ப சந்தோஷமா இருக்கு என்று இந்தியில் திருவாய்மலர்ந்தார்.

பெங்களூர், சென்னையில் சூட்டிங்கை நடத்திக் கொண்டு அப்படியே பாடல் காட்சிகள் எடுக்க சுவிஸ் மற்றும்குலுமனாலிக்கு நேகாவை கூட்டிக் கொண்டு போக இருக்கிறார்கள்.

படத்தைத் தயாரிக்கும் மகேஷ் கேரளாக்காரர். தமிழில் இது அவரது முதல் முயற்சி. இசையமைக்கப் போவதுஇமான். பா. விஜய், யுகபாரதி, பழனிபாரதி ஆகியோர் பாடல்கள் எழுதுகிறார்கள். படத்தில் வடிவேலு, கலாபவன்மணி ஆகியோரும் இருக்கின்றனர்.

படப்பிடிப்பை படபடவென முடித்து டிசம்பரில் ரிலீஸ் செய்யப் போகிறார்களாம்.

இந்த சூட்டிங் வேலைகள் ஒரு புறம் நடக்க, தனது வேலைகளை ஆரம்பித்துவிட்டார் நேகா.

சென்னைக்கு வந்து இறங்கிய கையோடு, மும்பையில் எடுக்கப்பட்ட போட்டோ ஆல்பத்துடன், தமிழ்தயாரிப்பாளர்களை சந்தித்து சான்ஸ் பிடிக்கும் வேலையில் தீவிரமாய் ஈடுபட்டுள்ளார் நேகா.

Read more about: cinema, neha, tamil film

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil