»   »  நெஞ்சம் மறப்பதில்லை - 24: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்!

நெஞ்சம் மறப்பதில்லை - 24: தமிழ் சினிமாவில் எம்ஜிஆர் செய்த 'முதல்' சாதனைகள்!

Subscribe to Oneindia Tamil

- பெரு துளசிபழனிவேல்

புரட்சித் தலைவர் எம்ஜிஆர் நூற்றாண்டு விழா... ஓஹோவென்று கொண்டாட வேண்டும் என அரசியல் தலைவர்களும் தொண்டர்களும் ரசிகர்களும் பெரிய அளவில் திட்டமிட்ட விழா இது. ஆனால் ஜெயலலிதாவின் மரணம், அதைத் தொடர்ந்து எழுந்த அரசியல் குழப்பங்களில், பெரிதாகக் கண்டு கொள்ளப்படாத விழாவாக மாறிப் போனது.

பிரேக்கிங் செய்திகளே ஊடகத்தை முற்றாக ஆக்கிரமித்ததில், எம்ஜிஆர் நூற்றாண்டு செய்திகள், கட்டுரைகளைப் பார்க்க முடியவில்லை. அந்தக் குறையைத் தீர்க்க இதோ சில கட்டுரைகள்...

 Nenjam Marappathillai -24: MGR Special

தமிழ் சினிமாவில் பல முதன்மைகளை, புதுமைகளை நிகழ்த்தியவை எம்ஜிஆர் படங்கள்.

* எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் ஆங்கிலத்தில் டைட்டில் கார்டு காட்டப்பபட்ட முதல் திரைப்படம் மாடர்ன் தியேட்டர்ஸ் தயாரித்த 'அலிபாபாவும் 40 திருடர்களும்'.

* எம்.ஜி.ஆர். நடித்து தரக்குறைவான பத்திகைகளின் போக்குக்கு எதிர்த்து எடுக்கப்பட்டு வெளி வந்தப் படம் சரவணா பிலிம்ஸ் 'சந்திரோதயம்'. அன்றைய சூழலில் ஒரு முன்னணிப் பத்திரிகையை முற்றாக எதிர்த்து நடித்தார் எம்ஜிஆர்.

 Nenjam Marappathillai -24: MGR Special

* எம்.ஜி.ஆர். நடித்து காளைமாட்டுடன் மோதும் (ஜல்லிக்கட்டு) காட்சியை முதன்முதலாக தமிழ் சினிமாவில் காட்டிய படம் 'தாய்க்குப்பின் தாரம்'.

* எம்.ஜி.ஆர். நடித்து தாழ்த்தப்பட்ட சமூகத்தின் பெருமையை திரைப்படம் மூலம் உலகுக்கு தெரிவித்த படம் கிருஷ்ணா பிக்சர்ஸ் தயாரித்த 'மதுரை வீரன்'.

 Nenjam Marappathillai -24: MGR Special

* எம்.ஜி.ஆர். நடித்து புலியுடன் மோதும் சண்டைக் காட்சியை முதன்முதலாக திரைப்படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் தயாரித்த 'குலேபகாவலி'.

* எம்.ஜி.ஆர். நடித்து சண்டைக் காட்சியின்போது 350 பவுண்ட் எடைக்கொண்ட சண்டை நடிகரை அலக்காக தூக்கி நிறுத்தி சண்டை காட்சியில் சாதனைப் புரிந்த படம் ஏவிஎம்மின் 'அன்பேவா'.

* எம்.ஜி.ஆர். நடித்து கிராமங்களில் நடக்கும் மாட்டு வண்டிபோட்டியை முதன் முதலில் திரைப்படத்தில் காட்டிய படம் ஆர்.ஆர்.பிக்சர்ஸ தயாரித்த 'பெரிய இடத்துப் பெண்'.

 Nenjam Marappathillai -24: MGR Special

* எம்.ஜி.ஆர். நடித்து முதன்முறையாக யோகா பயிற்சியை படத்தின் மூலம் மக்களுக்கு சொல்லிக் கொடுக்கும் காட்சி இடம்பெற்ற படம், தாமஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த 'தலைவன்'.

* எம்.ஜி.ஆர். உடற்பயிற்சி ஆசிரியராக நடித்து உடல் வளர்ச்சிக்கு தேவையான அனுகு முறையை மாணவர்களுக்கு சொல்லித் தரும் காட்சியை முதன் முதலாக படமாக்கப்பப்பட்ட படம் 'ஆனந்தஜோதி', 'பணம் படைத்தவன்'.

 Nenjam Marappathillai -24: MGR Special

எம்.ஜி.ஆர். நடித்து முதன்முதலாக கிராமத்து காட்சியும், நகரத்து காட்சியையும் இணைத்து கதை அமைத்து திரைப்படமாக வெளிவந்த படம் ஆர்.ஆர். பிக்சர்ஸ் 'பெரிய இடத்துப் பெண்'.

எம்.ஜி.ஆர். நடித்து பேருந்தில் பணியாற்றும் போக்குவரத்து தொழிலாளர்களின் பிரச்சனைகளை மையமாக வைத்து அதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட படம் தேவர் பிலிம்ஸ் 'தொழிலாளி'.

எம்.ஜி.ஆர். நடித்து மீனவ மக்களின் போராட்ட வாழ்க்கையை முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்து வெற்றிப்பெற்ற படம் சரவணா பிலிம்ஸ் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். நடித்து ஓய்வில்லாத ஒரு பிரபலமான தொழிலதிபரின் காதல் கதையை முழுமையாக முதன்முறையாக படமாக்கப்பட்ட படம் ஏவிஎமின் 'அன்பே வா'.

எம்.ஜி.ஆர். நடித்து பம்பாய் நகரில் முழுமையாக படமாக்கப்பட்டு வெளிவந்த படம் ராகவன் புரொடக்ஷன்ஸ் 'சபாஷ் மாப்பிள்ளே'.

 Nenjam Marappathillai -24: MGR Special

எம்.ஜி.ஆர். நடித்து ரிக்ஷாவில் அமர்ந்தபடியே சிலம்பு சண்டை போடும் காட்சியை தமிழ் சினிமாவிலேயே முதன்முறையாக எடுக்கப்பட்ட படம் 'ரிக்ஷாக்காரன்'. இந்தப் படத்துக்காக இந்திய அரசங்கத்திடமிருந்து பாரத பட்டத்தைப் பெற்றார்.

எம்.ஜி.ஆர். படத்தில்தான் நடிகர் முத்துராமன் அறிமுகமானார். படம் 'அரசிளங்குமரி'.

எம்.ஜி.ஆர். படத்தில் அறிமுகமான இன்னொரு முக்கிய நடிகர் அசோகன். படம் 'பாக்தாத் திருடன்'.

எம்.ஜி.ஆர். நடித்து அண்ணன், தங்கை பாசத்தை முழுமையாக சினிமாவில் காட்டப்பட்டப்படம் முதல்படம் 'என் தங்கை'. எம்.ஜி.ஆர். நடித்த படங்களில் அதிக நாட்கள் (352) ஒடிய படமும் 'என் தங்கை' தான்.

எம்.ஜி.ஆர். நடித்து நல்ல கருத்துகளை வலியுறுத்தும் தலைப்பில் வெளிவந்த படங்கள்: 'நல்லவன் வாழ்வான்', 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தர்மம் தலைக்காக்கும்', 'பெற்றால் தான் பிள்ளையா', 'சிரித்து வாழ வேண்டும்', 'நீதிக்குத் தலைவணங்கு'.

எம்.ஜி.ஆருடன் இணைந்து 9 கதாநாயகிகள் நடித்த படம் 'நவரத்னம்'. தமிழில் இதுவும் ஒரு 'முதல்முதலாக'தான்.

எம்.ஜி.ஆர். நடித்து கிழக்கு ஜெர்மன், எகிப்து, துருக்கி, இஸ்ரேல் போன்ற நாடுகளில் திரையிடப்பட்ட முதல் தமிழ்ப் படம் 'நாடோடி மன்னன்' (1958). இந்தப் படம் வெளிவந்த போது ரிசர்வேஷனிலும் சாதனைப் புரிந்தது.

எம்.ஜி.ஆர். நடித்து, ஈரான் நாட்டு படவிழா, மாஸ்கோ படவிழா, சர்வதேச படவிழா தாஷ்கண்ட் படவிழா, கோவா படவிழா என்று பல விழாக்களில் கலந்துக் கொண்ட முதல் தமிழ்ப்படம் சத்யா மூவிஸ் 'இதயக்கனி'. இந்தப் படத்தின் 100 நாள் வெற்றி விழா ஆந்திரா முதல்வர் என்.டி.ராமாராவ் தலைமையில் நடந்தது (அப்போது அவர் முதல்வராகவில்லை. எம்ஜிஆருக்குப் பிறகுதான் அவர் அரசியலுக்கு வந்தார்).

எம்.ஜி.ஆர். நடித்து சென்னை சத்யம் திரையரங்கில் ஓடி வெள்ளி விழா கொண்டாடிய முதல் தமிழ்ப் படம் 'இதயக்கனி'.

 Nenjam Marappathillai -24: MGR Special

எம்.ஜி.ஆர். நடித்த 'நீரும் நெருப்பும்' படத்திற்காக நடந்த ரிசர்வேஷன் கூட்டத்தை கட்டுப்படுத்துவற்காக குதிரைப்படை வரவழைக்கப்பட்டது, தமிழ் சினிமாவில் முதல்முறை நடந்த அதிசயம்.

எம்.ஜி.ஆர். அடையாளம் கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு வயோதிகர் வேடத்தில் ஒருசில காட்சிகளில் நடித்த படங்கள் 'மலைக்கள்ளன்', 'குலேபகாவலி', 'பாக்தாத் திருடன்', 'படகோட்டி'.

அன்றைய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர். நடித்து விஞ்ஞான அடிப்படையில் உருவான கதையை படமாக்கப்பட்ட படங்கள் 'கலையரசி', 'உலகம் சுற்றும் வாலிபன்'. இந்த ஜானரில் வெளிவந்த முதல் தமிழ்ப் படம் என்ற பெருமை கலையரசிக்கே.

எம்.ஜி.ஆர். நடிப்பில் வெளி வந்த முதல் சமூகப்படம் 'திருடாதே'.

எம்.ஜி.ஆர். நடித்து தனது தாயாரின் பெயரில் சத்யா ராஜா பிலிம்ஸ் சார்பில் தயாரித்து, சகோதரர் எம்.ஜி. சக்கரபாணியை இயக்குநராகப் பணியாற்ற வைத்த படம் 'அரசக் கட்டளை'.

எம்.ஜி.ஆர். நடித்து பொங்கல் திருநாளன்று வெளிவந்து வெற்றிப்பெற்றப் படங்கள் 'அலிபாபாவும் 40 திருடர்களும்', 'சக்கரவத்தி திருமகள்', 'அரசிளங்குமரி', 'ராணி சம்யுக்தா', 'பணத்தோட்டம்', 'வேட்டைக்காரன்', 'எங்க வீட்டுப் பிள்ளை', 'அன்பேவா', 'தாய்க்குத் தலைமகன்', 'ரகசிய போலீஸ் 115, 'மாட்டுக்காரவேலன்', 'மதுரையை மீட்ட சுந்தரப்பாண்டியன்'.

எம்.ஜி.ஆர். நடித்த திகில், மர்மம், கொலை, போன்ற காட்சிகளை சித்தரித்து எடுக்கப்பட்ட படங்கள் 'தர்மம் தலைகாக்கும்', 'என் கடமை', 'தாழம்பூ.

எம்.ஜி.ஆர். நடித்து காட்டின் பின்னணியில் எடுக்கப்பட்ட படங்கள் 'தாய் சொல்லைத் தட்டாதே', 'தாயைக்காத்ததனயன்', 'வேட்டைக்காரன்'.

எம்.ஜி.ஆர். சீர்காழியில் நடந்த 'அட்வகேட் அமரன்' நாடகத்தில் நடித்த போது கால் முறிந்து பின் குணமாகி மீண்டும் வந்து நடித்து கொடுத்தப் படம் 'தாய் மகளுக்கு கட்டிய தாலி'.

எம்.ஜி.ஆர். நடித்து கோவா கடற்கரையில் படமாக்கப்பட்ட படங்கள் 'நாடோடி மன்னன்', 'ஆயிரத்தில் ஒருவன்', கேரளா கடற்கரையில் முழுமையாக படமாக்கப்பட்ட படம் 'படகோட்டி'.

எம்.ஜி.ஆர். முதன்முதலில் வண்ணத்தில் நடித்து கொடுத்த படங்களும், நிறுவனங்களும் : 'அலிபாபாவும் 40 திருடர்களும்' - மாடர்ன் தியேட்டர்ஸ், 'படகோட்டி' - சரவணா பிலிம்ஸ், 'எங்கவீட்டுப் பிள்ளை' - விஜயா வாஹினி, 'ஆயிரத்தில் ஒருவன்' - பத்மினி பிக்சர்ஸ், 'அன்பேவா' - ஏவிஎம், 'பறக்கும் பாவை' - ஆர்.ஆர்.பிக்சர்ஸ் (டிஆர் ராமண்ணா), 'ஒளிவிளக்கு' - ஜெமினி பிக்சர்ஸ், 'நல்ல நேரம்' - தேவர் பிலிம்ஸ்.

எம்.ஜி.ஆர். வில்லனாக நடித்த படங்கள் : 'சாலிவாகனன்', 'பணக்காரி', 'மாயா மச்சீந்திரா'. 'சாலிவாகனன் படத்தில் ரஞ்சன் கதாநாயகனாக நடித்தார். 'பணக்காரி' படத்தில் வி.நாகையா கதாநாயகனாக நடித்தார்.

எம்.ஜி.ஆர். நடித்து விளம்பரப்படுத்தப்பட்டும், பூஜைபோடப்பட்டும் நின்று போன படங்களின் பட்டியலும் கொஞ்சம் பெரிதுதான்.

'சாயா', 'குமாரதேவன்', 'வாழப் பிறந்தவன்', 'பாகன் மகன்', 'மக்கள் என் பக்கம்', 'மறுபிறவி', 'தந்தையும் மகனும்', 'வெள்ளிக்கிழமை', 'தேனாற்றங்கரை', 'அன்று சிந்திய ரத்தம்', ' இன்ப நிலா', 'பரமபிதா', 'ஏசுநாதர்', 'நாடோடியின் மகன்', 'கேரளக் கன்னி', 'கேப்டன் ராஜா', 'வேலு தேவன்', 'உன்னை விடமாட்டேன்', 'புரட்சிப் பித்தன்', 'சமூகமே நான் உனக்கே சொந்தம்', 'தியாகத்தின் வெற்றி', 'எல்லைக் காவலன்', 'சிலம்புக்குகை', 'மலைநாட்டு இளரவசன்', 'சிரிக்கும் சிலை, 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு, இன்பக் கனவு', 'நானும் ஒரு தொழிலாளி'.

- எம்ஜிஆர் ஸ்பெஷல் தொடரும்..

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The 24th Chapter of Nenjam Marappathillai is MGR centenary celebration special.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more