»   »  'காதல் மெய்ப்பட'

'காதல் மெய்ப்பட'

Subscribe to Oneindia Tamil
Madhumitha with VishnuPriyan

ஹீரோயின் தவிர முற்றிலும் புதுமுகங்கள் அறிமுகமாகும் இன்னொரு காதல் டைட்டில் கொண்ட படம் காதல் மெய்ப்பட.

துவாரகமாயி சினி புரொடக்ஷன்ஸ் சார்பில் எஸ்.என்.ஹர்ஷிதா தயாரிக்கும் இந்தப் படத்தை இயக்குவதும் புதுமுக இயக்குனர் விஸ்வதனுஷ். இவர் மனோபாலா, சந்தானபாரதி, அதியமான் ஆகியோரிடம் அஷிஸ்டென்ட்டாக பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.

அண்டை வீட்டில் வசிக்கும் இளைஞன், பெண்ணின் சாதாரண நட்பை பெற்றோர் எதிர்க்க அது காதலாக மாறுவதே கதையாம்.

இப்படத்தின் கதாநாயகனாக விஷ்ணுப்ரியன் என்பவர் அறிமுகமாக, கதாநாயகியாக குடைக்குள் மழை மதுமிதா நடிக்கிறார்.

படத்தின் இசையமைப்பாளரான முர்ஷக்கும் புது வரவே. சிரஞ்சீவி என்பவர் ஒளிப்பதிவு செய்ய, படப்பிடிப்பு சென்னை, தூத்துக்குடி, காரைக்குடி பக்கமாக நடந்து முடிந்துள்ளது.

போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளும் ஆரம்பித்துவிட்ட நிலையில் மிக விரைவில் வெள்ளித் திரைக்கு வருகிறது காதல் மெய்ப்பட.

காதல் மெய்யா, இல்லையா?

Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil