»   »  ஸ்பெஷல்ஸ்

ஸ்பெஷல்ஸ்

Posted By:
Subscribe to Oneindia Tamil

குறும்பு படத்தில் தியாவோடு மோதிய நிகிதா, தமிழில் நடிக்கும் அடுத்த படம் சத்ரபதி.

கன்னடத்து வரவான நிகிதா நடித்த முதல் படம் போணியாகதால் அவரை கோடம்பாக்கமும் மறந்தது. இதையடுத்துபெங்களூரில் கன்னட படங்களில் சில காலம் குப்பை கொட்டிவிட்டு தெலுங்கிலும் ஒரு சுற்று சுற்றிவிட்டு, மீண்டும்தமிழுக்கு வந்திருக்கிறார்.

தெலுங்கில் தளுக் மொழுக் என்று இருந்தால் தான் காலம் தள்ள முடியும் என்பதால், உடம்பை உப்ப விட்டார்நிகிதா. ஆனால், உடல் பெரிதான அளவுக்கு பெரிய அளவில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை. இதனால் தமிழில்பகீரத பிரயத்தனம் செய்து சத்ரபதி பட சான்ஸைப் பிடித்துள்ளார்.

முதல் படத்தில் பார்த்த நிகிதாவுக்கும் இவருக்கும் ரொம்பவே வித்தியாசம். எடையைக் கூட்டியதாடு உடையைக்குறைத்திருக்கிறார்.

ஏதோ சத்ரபதி படம் தான் தனக்குக் கடைசி படம் மாதிரி, அளவின்றி தரிசனம் தந்திருக்கிறார் நிகிதா. ஏய் படத்தில்நமிதாவுடன் கும்மாளம் போட்ட சரத்குமாருக்கு இந்தப் படத்தில் நிகிதா. குடுத்து வச்ச மனுசன்.


சூப்பர் குட் பிலிம்ஸ் செளத்ரி தயாரிக்கும் இப் படத்தில் கட்டப் பஞ்சாயத்து செய்யும் ஒரு ரெளடியைஇளைஞரான (!!) சரத்குமார் கடத்துகிறாராம். சரத்குமாரின் பெயர் தான் சத்ரபதி.

அரசாங்கமும், அரசாங்க அதிகாரிகளும், காவல் துறையை சேர்ந்தவர்களுமே நெருங்க பயப்படும் ஒருஅதிபயங்கர தாதாவை தனியாளாக சத்ரபதி கடத்த, இதனால் தமிழகமே பரபரப்பாகிறதாம், அரசாங்கமே ஆடிப்போகிறதாம், சட்டம் ஒழுங்கு பிரச்னை ஏற்பட்டு விடுமோ என்று பயப்படுகிறதாம்.

ஆனால், தனி மனிதனாக அவனது சாம்ராஜ்யத்தையே வீழ்த்துகிறாராம் நமது ஹீரோ. இப்படி போகிறது கதை.இந்த பயங்கர வில்லனாக லாம்பர்ட் என்ற புதுமுகம் நடிக்கிறார்.

எஸ்.ஏ. ராஜ்குமார் இசையமைக்கும் இந்தப் படத்தை மகேஷ் என்பவர் இயக்குகிறார்.

படத்தின் கதை அரதப் பழசாக இருப்பதால், சதையை நம்பித்தான் படத்தை எடுத்துள்ளார்கள். நிகிதாவுக்குவேலையே சரத் குமாரையும் படம் பார்க்கும் நம்மையும் சூடேற்றுவது தான். மற்றபடி அவரது கதாபாத்திரத்தின்தலையில் பெரிய லோடு எதையும் எடுத்து வைத்திடவில்லை டைரக்டர்.


தியேட்டருக்கு யூத்தை இழுக்கும் வகையில் நிகிதாவுக்கு தரப்பட்டதெல்லாம் கிச்சாங் சீன்கள் தான். கொடுத்தவேலையை தாராளமாய் செய்துவிட்டுப் போயிருக்கிறார் நிகிதா.

படம் கிட்டத்தட்ட முடிந்துவிட்ட நிலையில், ரஷ் போட்டுப் பார்த்தால் ஏதோ ஒன்று மிஸ் ஆனதாம் (கதையாகஇருக்குமோ? !). நிகிதா என்னதான் ஒத்துழைத்திருந்தாலும், படத்தில் ஒரு கிக் இல்லை என்ற முடிவுக்கு வந்த படக்குழு, அவசரமாய் ரம்பாவைக் கூட்டி வந்து ஒரு அதிரடி ஆட்டம் போட வைத்திருக்கிறது.

எந்த பட வாய்ப்பும் இல்லாமல் மும்பைக்குப் போய்விட்ட ரம்பா, ஒத்த பாட்டுக்கு டான்ஸ் என்றதும் அடித்துப்பிடித்து அடுத்த பிளைடில் பறந்து வந்தாராம் (இதுக்குத்தான் இப்போது மகா போட்டி நிலவுகிறதே!).


நன்றாகவே ஒத்துழைப்பு கொடுத்து தனது அழகு கொழிக்க ஆட்டமோ ஆட்டம் ஆடிவிட்டுப் போனாராம். இந்தஒரு குத்தாட்டத்துக்கு அவருக்குத் தரப்பட்ட சம்பளம் ரூ. 8 லட்சமாம்.

இதைப் பார்த்து நறநறத்திருக்கிறார் நிகிதா. படம் பூராவும் நடித்தும் அவருக்குத் தரப்பட்டது ரூ. 3 லட்சம் தானாம்.அடப் பாவமே !!

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil