»   »  மருதமலை நிலா-தமன்னா

மருதமலை நிலா-தமன்னா

Subscribe to Oneindia Tamil

எத்தனை படம் ஊத்தினாலும் கவலைப்படாமல் ஏதாவது ஒரு படத்தில் நடித்தோ அல்லது தானே தயாரித்து, இயக்கியோ தமிழ் ரசிகர்களின் பொறுமையை விடாமல் சோதித்து வரும் பழைய ஆக்ஷன் கிங் அர்ஜூன் அடுத்த படத்தை தயார் செய்து வருகிறார்.

சமீபத்திய தோல்விப் படங்களாக மதராஸி, வாத்தியார் ஆகியவற்றைத் தொடர்ந்து இவர் நடித்து வரும் படம் மருதமலை. இயக்குனராக சூரஜை பிடித்துப் போட்டுள்ளார். குஷ்புவின் வூட்டுக்காரர் சுந்தரை வைத்து தலைநகரம் படத்தை இயக்கி அதை வெற்றி பெறச் செய்தும் காட்டியவர் சூரஜ்.

இதனால் அவர் மீது பெரு நம்பிக்கை வைத்து நடித்துக் கொண்டிருக்கிறார் அர்ஜூன். இந்தப் படத்திலும் அர்ஜூனுக்கு வழக்கம்போல் இளைஞர் வேடம் தான். தென் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு கோபக்கார வாலிபராக வருகிறாராம். படத்தில் வரும் கேரக்டர்கள் எல்லாமே மதுரை, திருநெல்வேலி பாஷையைத் தான் பேச வேண்டும் என்பதால் அர்ஜூனும் இந்த பாஷையை கற்று வருகிறாராம்.

தமிழை தனது தாய்ெமாழியான கன்னடம் போலவே தான் இதுவரை பேசிக் கொண்டிருந்தார் அர்ஜூன். இப்போது மதுரை ஸ்டைலில் பேச ரொம்பவே மெனக்கெட்டு வருகிறாராம்.

படத்தில் ஒரு ஸ்டண்ட் காட்சியில் மும்பையின் 10வது மாடியில் இருந்து குதித்தாராம் அர்ஜூன். டூப் போடாமல் அவரே இந்தக் காட்சியை செய்திருக்கிறார்.

அர்ஜூன் பட பார்முலாவின் படி இதிலும் அவருக்கு ரெண்டு ஜோடிகள் தான். ஒருவர் நிலா. இன்னொருவர் தமன்னா.

தெலுங்கில் கலக்கி வரும் ஹிமா கான் என்ற குத்தாட்ட சுந்தரியும் ஒரு பாட்டுக்கு கும்மாங்குத்து போடுகிறார்.

ஆஸ்கர் பிலிம்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில் வடிவேலுவும் இருக்கிறார். ஜூன் மாதம் ரிலீசாம்.

இதற்கிடையே தனது சகோதரி மகன் சஞ்சீவி என்பவரையும் தமிழ் சினிமாவில் நுழைத்துவிட தீவிரம் காட்டி வரும் அர்ஜூன், தானே படத்தை தயாரிக்கவும் இருக்கிறாராம். இதற்காக அந்தத் தம்பியை பெங்களூரில் இருந்து சென்னைக்கு கொண்டு வந்திருக்கிறார்.

Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil