»   »  'கேள்விக்குறி' மீது வழக்கு!

'கேள்விக்குறி' மீது வழக்கு!

Subscribe to Oneindia Tamil
Jeilani with Sona
சமீபத்தில் திரைக்கு வந்த புதுமுக இயக்குநர் - ஹீரோ ஜெய்லானியின் கேள்விக்குறி படம் மீது சென்னை வழக்கறிஞர் ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

சுந்தர் ஜெபக்குமார் என்ற அந்த வழக்கறிஞர் இதுதொடர்பாக தாக்கல் செய்துள்ள மனுவில், காவல்துறையினர் மீதான நன்மதிப்பைக் கெடுக்கும் வகையில் இப்படத்தில் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

படத்தில் இடம் பெறும் ஒரு காட்சியில், விசாரணைக் கைதிகளிடம் போலீஸார் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதை மிகவும் மோசமாக சித்தரித்து காட்சி வைக்கப்பட்டுள்ளது.

சமூகத்தின் பார்வையில் போலீஸார் அனைவரும் தீய சக்திகள் என்ற கருத்து வரும் வகையில் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன.

காவல்துறை அதிகாரிகளை படத்தின் ஹீரோ ஜெய்லானி காவல்துறையினரைத் தாக்கிப் பேசும் வசனங்கள் காவல்துறையினர் மீதான நன்மதிப்பைக் குறைப்பதாக உள்ளது. இதனால் இளம் தலைமுறையினர் காவல்துறை குறித்துத் தவறாக எணணும் நிலை உருவாகும்.

காவல்துறையினரை அவமதிக்கும் வகையில் உள்ள இந்தப் படத்துக்குத் தடை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளார் ஜெபக்குமார்.

மனுவை விசாரித்த நீதிபதி ஆனந்தி, டிசம்பர் 13ம் தேதிக்கு விசாரணையை ஒத்திவைத்தார்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil