»   »  ஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக்

ஓம் சாந்தி ஓமின் ரெக்கார்ட் பிரேக்

Subscribe to Oneindia Tamil
Shahrukhan with Deepika padukone
ஷாருக்கான், தீபிகா படுகோன் நடித்து வெளியாகி சக்கை போடு போட்டுக் கொண்டிருக்கும் ஓம் சாந்தி ஓம் பெரும் வசூல் சாதனை படைத்துள்ளது.

ஷாருக்கானின் ரெட் சில்லீஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து, பாரா கான் இயக்கியுள்ள படம் ஓம் சாந்தி ஓம். ஷாருக்கான் நடிகராக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடி போட்டுள்ளார் தீபிகா.

படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. உள்ளூரில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கூட ஓம் சாந்தி ஓம் அலை படு பயங்கரமாக வீசி வருகிறது. திரையிடப்பட்ட முதல் வாரத்திலேயே 19 மில்லியன் அமெரிக்க டாலர்களை வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது ஓம் சாந்தி ஓம்.

இந்திய சினிமா வரலாற்றில் இது மிகப் பெரிய சாதனையாக கூறப்படுகிறது. உலகம் முழுவதும் 1400க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் ஓம் சாந்தி ஓம் திரையிடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ள சில மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் அதிகாலையிலேயே இப்படத்தை திரையிட்டுள்ளனர். ரஜினியின் சிவாஜி படமும் இதுபோலத்தான் அதிகாலையிலேயே, சில ஊர்களில் நள்ளிரவிலேயே கூட திரையிடப்பட்டன என்பது நினைவிருக்கலாம்.

இந்தியாவில் மட்டும் முதல் வாரத்தில் 13.5 மில்லியன் அமெரிக்க டாலர்களை இப்படம் வசூலித்துள்ளது. இங்கிலாந்தில் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர்களையும், வட அமெரிக்காவில் 2 மில்லியன் டாலர்களையும் இப்படம் வசூலித்துள்ளது.

2வது வாரத்தில் பல மல்ட்டிபிளக்ஸ் தியேட்டர்களில் தினசரி 14 முதல் 16 காட்சிகள் வரை திரையிடப்பட்டன.

இந்தியாவில் இப்படம் திரையிடப்பட்டுள்ள பெரும்பாலான தியேட்டர்களில் 95 சதவீதம் முதல் 100 சதவீதம் வரை அரங்குகள் நிறைந்து காணப்படுகின்றன.

ஷாருக்கானின் திரையுலக வரலாற்றில் இப் படம் மிகப் பெரிய சாதனைப் படம் என்று பாலிவுட் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இப்படத்தில் சல்மான் கான், ராணி முகர்ஜி, கஜோல், சஞ்சய் தத், பிரியங்கா சோப்ரா, பிரீத்தி ஜிந்தா, சைப் அலி கான் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட முன்னணி பாலிவுட் நட்சத்திரங்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுவே பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

இந்தப் படத்தை உலகளாவிய அளவில் ஈராஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் திரையிட்டுள்ளது. ஏற்கனவே மெய்ன் ஹூன் நா மற்றும் பஹேலி ஆகிய படங்களையும் இந்த நிறுவனம் உலகளாவிய அளவில் திரையிட்டுள்ளது
Read more about: deepika padugone, om shanthi om
Please Wait while comments are loading...

Tamil Photos

Go to : More Photos

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil