twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    அத்தை மடி மெத்தையடி.. மனதை மயக்கும் குரல் ஜாலக்காரர் பி.சுசீலா!

    By Soundharya
    |

    இன்றும் கேட்க கேட்க சலிக்காத குரல் என்றால், அது நம் பி சுசீலாவின் குரல் தான். இவரது குரலுக்காகவும், இவரது பாடல் உச்சரிப்பிற்காகவுமே இவரின் பாடல்களுக்கு இன்றளவும் ரசிகர் கூட்டம் அலைமோதுகிறது. மன்னவனே அழலாமா... காதல் சிறகை காற்றினில் ஏந்தி... நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா... என்றால் ஓடி வருவது நம் மனம் இல்லை.. அந்த நிலாவே இறங்கி வந்துவிடும்.

    பி சுசீலா தமிழ் திரையுலகிற்கு கிடைத்த வைர பொக்கிஷம் என்று கூறலாம். இவரது பாடல்கள் அவ்வளவு இதமானவை. இவர் பாடிய பாடல்களை இன்று மட்டுமில்லை, இனி வரும் தலைமுறைகள் கேட்டால் கூட அவர்களும், பி சுசீலாவின் பாடல்களுக்கு அடிமையாகிவிடுவர்.

    தமிழ் மட்டுமல்லாமல், இந்திய அளவில் முன்னணி திரைப்பட பாடகி சுசீலா. தெலுங்கைத் தாய் மொழியாகக் கொண்ட இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் பாடல்கள் பாடியுள்ளார். இவர் தனது நாற்பது ஆண்டுகளில் இந்திய மொழிகளில் கிட்டத்தட்ட 40,000 பாடல்களுக்கு மேல் பாடியுள்ளார்.

    கர்நாடக இசையில் வல்லவர்

    கர்நாடக இசையில் வல்லவர்

    சுசீலா ஆந்திர மாநிலம், விஜயநகரத்தில் பிறந்து, அங்கு, ஆந்திராவின் புகழ்பெற்ற இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றவர். கர்நாடக இசையில் வல்லவர். 1950-ம் ஆண்டு, சென்னை வானொலியில் பாப்பா மலர் நிகழ்ச்சியில் பாடத் தொடங்கினார். இவரது இசை திறமையை கண்டு வியந்த இயக்குநர் கே. எஸ். பிரகாஷ்ராவ் தனது பெற்றதாய் படத்தில் முதன் முதலில் பின்னணி பாட வைத்தார்.

    பெயரும் மதிப்பும்

    பெயரும் மதிப்பும்

    அதன் பின்னர், பல்வேறு வாய்ப்புகள், பல மேடைகள், இன்று வரை சற்றும் குறையாத அளவிற்கு... . 1955 இல் வெளிவந்த "கணவனே கண் கண்ட தெய்வம்" என்ற படத்தில் இடம்பெற்ற "எந்தன் உள்ளம் துள்ளி விளையாடுவதும்", "உன்னைக் கண் தேடுதே" என்ற பாடல்கள் சுசீலாவுக்குப் பெயரையும், மதிப்பையும் பெற்று தந்தன.

    விருது பல வென்றவர்

    விருது பல வென்றவர்

    பல பாடல்களுக்கு பல ஏராளமான விருதுகளை பெற்ற இவர், 1969 ஆம் ஆண்டில் தேசிய அளவில் சிறந்த பாடகிக்கான விருதை பெற்றார். இவர் கடைசியாக 2008 ஆம் ஆண்டில் வெளிவந்த சில நேரங்களில் என்ற திரைப்படத்தில் பொட்டு வைத்த என்ற பாடலைப் பாடினார். தற்போது பல மேடை நிகழ்சிகளில் பங்கேற்று வருகிறார்.

    மொழி வாரிப் பாடல்கள்

    மொழி வாரிப் பாடல்கள்

    பி சுசீலா பாடிய பாடல்களை மொழி வாரியாக பிரித்தால், இவர் தெலுங்கில், 19,873 பாடல்களும், 8,678 திரைப்பட காதல் பாடல்களும், 1,195 பக்தி பாடல்களும், பாடியுள்ளார். இவர் பாடகர் எஸ் பி பி யுடன் 1,336 காதல் பாடல்கள் பாடியுள்ளார்.

    தமிழில் 10,676

    தமிழில் 10,676

    தமிழில், மொத்தம் 10,676 பாடல்கள் பாடியுள்ளார். இதில், 3,542 திரைப்பட பாடல்களும், 1,014 தமிழ் பக்தி பாடல்களும், 2 தமிழ் இஸ்லாம் பாடல்களும், 83 கிறுத்துவ பாடல்களும், 30 ஆல்பம் பாடல்கள், 5 பாடல்கள் சின்னத்திரைக்காகவும், 727 பாடல்கள் காதல் பாடல்களை டிஎம் எஸ்-உடனும், 257 பாடல்களை எஸ் பி பி உடனும் பாடியுள்ளார்.

    ஏனைய மொழிகளில் 107 பாடல்கள்

    ஏனைய மொழிகளில் 107 பாடல்கள்

    கன்னட மொழியில் 5000 பாடல்கள் பாடியுள்ளார். இதில், 4000 திரைப்பட பாடல்கள் மற்றும் 1000 பக்தி பாடல்கள் அடங்கும். மலையாளத்தில் 916 பாடல்களில், 846 திரைப்பட பாடல்களும், 70 பக்தி பாடல்கள் வீதம் பாடியுள்ளார். இந்த தென்னிந்திய மொழிகளை தவிர, மற்ற ஏனைய மொழிகளில் 107 பாடல்கள் பாடியுள்ளார்.

     விருதுகள்

    விருதுகள்

    இவர் பாடிய பாடல்களுக்காக 2008-ம் ஆண்டு பத்மபூஷன் விருதும், 5 தேசிய விருதுகளும், ஆந்திர மாநில அரசின் ரகுபதி பெங்கையா விருது மற்றும் கலைமாமணி விருதும் பெற்றுள்ளார். இதனை தவிர, பல மொழிகளில், மாநில விருது, பிலிம் பேர் விருது, நந்திவிருதுகள், என எண்ணற்ற விருதுகளையும் வாங்கி குவித்துள்ளார்.

    சோலோ சாதனை

    சோலோ சாதனை

    தனக்கென ஒரு இடத்தினை பிடிப்பது என்பது அரிதான ஒன்று. அந்த வகையில், 50' களிலிருந்து தற்போது வரை தன்னுடைய இடத்தினை விடாமல் நிலைத்திருக்கும் பி சுசீலா ஆசியா மற்றும் இந்திய அளவில் ரெகார்ட் புத்தகத்தில் இடம்பெற்றுள்ளார். இது அவரது பாடல்களுக்கும், உலகில், அதிக தனி (சோலோ) பாடல்கள் பாடியதற்காக கிடைத்த சாதனை ஆகும். ஆசிய நாடுகள் அளவில், ரெகார்டில் தன் பெயரை பதிவிட்ட பி சுசீலா-விற்கு நமது பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்..

    English summary
    P.Suseela entered in Guinness, Asia & India Book of records officially for singing the highest number solo songs in the world.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X