»   »  12 மொழிகள்... 40 ஆயிரம் பாடல்கள்.. இசையரசி சுசீலா! #HBDPSuseela

12 மொழிகள்... 40 ஆயிரம் பாடல்கள்.. இசையரசி சுசீலா! #HBDPSuseela

Posted By:
Subscribe to Oneindia Tamil

கான கோகிலா, கான சரஸ்வதி என்றெல்லாம் புகழப்படும் இசையரசி பி சுசீலாவின் 82வது பிறந்த நாள் இன்று.

1935-ம் ஆண்டு இதே நாளில் விசாகப்பட்டிணத்தில் பிறந்தவர் பி சுசீலா. அறுபது ஆண்டுகளில் தமிழ் உள்ளிட்ட 12 மொழிகளில் 40,000 மேல் பாடல்களைப் பாடியுள்ளார்.

கின்னஸ் சாதனை

கின்னஸ் சாதனை

எல்.டி.சுப்புலட்சுமி, எம்.எஸ்.சுப்புலட்சுமி, தொடங்கி ஜிக்கி, லீலா, எஸ் ஜானகி, வாணி ஜெயராம், எல்ஆர் ஈஸ்வரி, சித்ரா, ஸ்வர்ணலதா என பல சாதனைப் படைத்த பிரபல பாடகிகளின் மத்தியில் இந்தியாவிலேயே அதிக பாடல்களைப் பாடிய முதல் பிண்ணனி பாடகி என்று கின்னஸ் சாதனை பெற்றவர் இன்று 82 வது பிறந்தநாள் காணும் சுசீலா.

டிஎம்எஸ் - சுசீலா

டிஎம்எஸ் - சுசீலா

இந்தி திரை உகின் புகழ் உச்சியில் மின்னிய லதா மங்கேஷ்கர், ஷம்ஷாத் பேகம், ஆஷா போன்ஸ்லே உட்பட பலரால் பாராட்டப்பட்டவர்.

பழம்பெரும் நடிகைகளான சரோஜாதேவி, கே.ஆர்.விஜயா உட்பட பத்துக்கும் மேற்பட்ட கதாநாயகிகளுக்கு 100 படங்களுக்கு மேல் பாடிய பெருமை பெற்றவர் பி.சுசீலா.

மறைந்த டிஎம் சௌந்தர்ராஜன் அவர்களுடன் அதிகப் பாடல்கள் பாடியவரும் இவரே.

முன்னணி இசையமைப்பாளர்கள்

முன்னணி இசையமைப்பாளர்கள்


கற்பகம் படத்தில் அனைத்து பாடல்களையும் பாடியவர் சுசீலா. ஆண் குரலே இடம் பெறாத பாடல்களைக் கொண்டு வெளியான முதல் படம் அது.

ஜி.ராமநாதன், கே.வி.மகாதேவன், விஸ்வநாதன் ராமமூர்த்தி, ஏ.எம்.ராஜா, சங்கர் கணேஷ், இளையராஜா, ஏஆர் ரஹ்மான் உட்பட இந்தியாவின் அனைத்து புகழ் பெற்ற இசையமைப்பாளர்களுடன் பணியாற்றியுள்ளார் சுசீலா. பி.பி.ஸ்ரீனிவாஸ், ஜேசுதாஸ், எஸ்.பி.பி என அனைத்து பிரபலங்களுடன் இனைந்து பாடல்களைப் பாடியுள்ளார் சுசீலா.

எஸ்பிபியுடன் 3000 பாடல்கள்

எஸ்பிபியுடன் 3000 பாடல்கள்

தெலுங்கில்தான் அதிகமாகப் பாடியுள்ளார் சுசீலா. மொத்தம் 12 ஆயிரம் பாடல்கள். தமிழ், தெலுங்கில் அதிகமாக இவர் இணைந்து பாடியது எஸ்பி பாலசுப்பிரமணியத்துடன். மொத்தம் 3000 பாடல்களை இருவரும் இணைந்து பாடியுள்ளனர். தமிழில் 7000 பாடல்களும், கன்னடத்தில் 5000 பாடல்களும் பாடி சாதனைப் படைத்துள்ளார்.

2005 வரை

2005 வரை

எண்பதுகளில் எஸ் ஜானகி, வாணி ஜெயராம், சித்ரா போன்றவர்கள் முன்னணி பாடகிகளாக வந்த பிறகு, பி சுசீலா தன் கவனத்தை பக்திப் பாடல்கள், கச்சேரிகள் பக்கம் திருப்பினார். அதே நேரம் தேர்ந்தெடுத்து திரைப்படங்களில் பாடி வந்தார். 2005 வரை திரைப்படங்களில் பாடினார் சுசீலா.

ஜெயலலிதா

ஜெயலலிதா

2012-ம் ஆண்டு நேரு உள்விளையாட்டு அரங்கில் நடந்த ஜெயா டிவி ஆண்டு விழாவில், முதல்வர் ஜெயலலிதா விரும்பிக் கேட்டுக் கொண்டதால் பி சுசீலா கலந்து கொண்டு பாடினார். பின்னர் ஜெயலலிதா வீட்டுக்குச் சென்று அவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டார்.

முதல் முறை

முதல் முறை

தமிழ் சினிமாவில் சிறந்த பின்னணிப் பாடகிக்கான தேசிய விருதினை (1969) முதலில் வென்றவர் பி சுசீலாதான். அது உயர்ந்த மனிதன் படத்தில் இடம்பெற்ற 'நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...' பாடலுக்காக. சவாலே சமாளி படத்தில் இடம்பெற்ற சிட்டுக் குருவிக்கென்ன கட்டுப்பாடு... பாடலுக்காக 1971-ல் மீண்டும் தேசிய விருது பெற்றார் சுசீலா. மேலும் மூன்று தேசிய விருதுகளை அவர் தெலுங்குப் பாடல்களுக்காக வென்றார். தமிழக, கேரள, ஆந்திர அரசுகளின் விருதுகளை 11 முறை பெற்றவர் சுசீலா.

அமுத தமிழ்

அமுத தமிழ்

பி சுசீலாவின் சிறப்பே, அவரது குரலும் அழகான உச்சரிப்பும்தான். தெலுங்கு குடும்பத்தில் பிறந்தாலும், தமிழை அழுத்தம் திருத்தமாகக் கற்றுக் கொண்டு, அழகான உச்சரிப்பைத் தந்தவர் சுசீலா. தமிழுக்கும் அமுதென்று பேர்... பாடலை சுசீலாவின் குரலில் கேட்கும்போதுதான் அமுதம் என்ற வார்த்தையின் அர்த்தம் புரியும். பின்னணி பாட வரும் யாராக இருந்தாலும் அவர்கள் முதலில் கேட்க வேண்டியது சுசீலாவின் பாடல்களை!

English summary
Legendary singer P Suseela is celebrating her 82nd birthday today.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil