twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    உலகிலேயே முதல் முறையாக நார்வேயில் பாலை படம் வெளியீடு!

    By Shankar
    |

    ஊடகங்களில் பெரிதும் பாராட்டப்பட்ட தமிழ்ப் படமான 'பாலை', இந்தியாவுக்கு வெளியே உலகிலேயே முதல்முறையாக நார்வே நாட்டில் திரையிடப்படுகிறது.

    சங்க கால தமிழர்களின் வாழ்க்கை, போர்முறையை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம் பாலை. தமிழீழ மக்களின் போராட்ட வரலாற்றின் கருமையையும் இந்தப் படம் பதிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

    இந்தப் படம் தமிழகத்தின் குறிப்பிட்ட சில நகரங்களில் மட்டுமே வெளியானது.

    பாலையை இப்போது சர்வதேச அரங்கில் கொண்டுபோகும் முயற்சி நடக்கிறது. முதல் முறையாக நார்வேயில் பாலை படத்தை வெளியிடுகிறார்கள். நார்வே தலைநகர் ஆஸ்லோவில் உள்ள ஃபில்மென்ஸஸ் கினோ அரங்கில் இந்தப் படம் வரும் ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் 18-ம் தேதி வெளியாகிறது.

    நார்வே தமிழரான வசீகரன் சிவலிங்கத்தின் விஎம் மியூசிக் ட்ரீம்ஸ் நிறுவனமும், அபிராமி கேஷ் அண்ட் கேரி நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தை நார்வேயில் வெளியிடுகிறது.

    English summary
    Paalai, the recently released critically acclaimed movie will be released in Norway’s capital Oslo on 18th December.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X