»   »  பத்மாவிடம் சிக்கிய புள்ளிகள்பிடிபட்ட கசமுசா வீடியோக்கள்

பத்மாவிடம் சிக்கிய புள்ளிகள்பிடிபட்ட கசமுசா வீடியோக்கள்

Subscribe to Oneindia Tamil

நடிகை பத்மா நாராயணனிடம் பல புள்ளிகள் சிக்கி பெரும் பணத்தை இழந்துள்ளது போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

வீராசாமி படத்தில் 2வது நாயகியாக நடித்தவர் இந்த பத்மா. இவர் ஆந்திரவைச் சேர்ந்த தொழிலதிபர் பிரதீப் கொணேருவுடன் ஆபாச கோலத்தில் இருந்தபோது அதை தனது நண்பரும் துணை நடிகருமான சஞ்சய் மூலம் வீடியோவில் பதிவு செய்து, அதைக் காட்டி ரூ.10 கோடி தருமாறு மிரட்டினார்.

இதையடுத்து பிரதீப் கொடுத்த புகாரின் பேரில் போலீஸார் பொறி வைத்து பத்மாவையும், அவரது கூட்டாளிகலான சஞ்சய், சந்திரன், அமீர் ஜான் ஆகியோரையும் வளைத்துப் பிடிகத்துக் கைது செய்தனர்.

அவரிடம் பிடிபட்ட பல சிடிக்களில் அவர் பல ஆண்களுடன் ஆபாசமாகத் தோன்றும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன.

இந் நிலையில் பத்மா குறித்து இப்போது கதை கதையாக தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.

வாலிப வயதை பத்மா எட்டிய பத்மாவுக்கு திருமணம் செய்து வைத்து விட அவரது வீட்டில் முடிவு செய்தனராம். ஆனால் பத்மாவுக்கு செவ்வாய் தோஷம் இருந்ததால் திருமணம் தள்ளிப் போனதாம்.

இதனால் மனம் வெறுத்த நிலையில்தான் மாடலிங்குக்கு வந்தார் பத்மா. ஆனால் அதில் போதிய பணம் கிடைக்கவில்லை. இதனால் ஏமாற்றமடைந்தார். அப்போதுதான் அவருக்கு சஞ்சய் அறிமுகமானார். அவரும் அப்போது மாடல்தான்.

பத்மாவின் அழகில் மயங்கிய சஞ்சய் அவர் மீது காதல் கொண்டார். ஆனால் எடுத்துவுடன் காதலைச் சொல்லாமல், பத்மா மீது அனுதாபம் கொண்டவராக தன்னைக் காட்டிக் கொண்டார். அவருக்கு ஆறுதல் கூறினார். வசதியாக வாழ பல வழிகள் உள்ளதாக விளக்கி அவரை தன் பக்கம் ஈர்த்தார்.

சஞ்சயின் ஆறுதல் பேச்சு பத்மாவுக்கு அவர் மீது ஈர்ப்பை ஏற்படுத்தியது. சஞ்சயைக் காதலிக்க ஆரம்பித்தார் பத்மா. அதன் பின்னர் பணம் சம்பாதிக்க வேண்டும், வசதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்பட்ட பத்மா அதற்குத் தேர்ந்தெடுத்த வழிதான் விபச்சாரம்.

மேலும் இந்த விபச்சாரத்தை புரோக்கர்கள் மூலம் செய்தால் சிக்கல்கள் வரலாம் என்பதால் சஞ்சய்யுடன் இணைந்து பிரைவேட்டாகவே செய்ய ஆரம்பித்தார்.

இவரை கல்யாணம் செய்ய தயாராக இருந்த சஞ்சய், அவரை விபச்சாரம் செய்யவும் அனுமதித்திருக்கிறார்.

சாதாரண ஆட்களை விட்டு விட்டு பெரும் பெரும் தொழிலதிபர்களுக்கே வலை வீசினார் பத்மா. சஞ்சய் பல இடங்களுக்கும் போய் பெரும் பணப் பார்ட்டிகளைப் பார்த்து வந்து பத்மாவிடம் சொல்வார். அவர் போய் ஆளைக் கணக்குப் பண்ணி வலையில் வீழ்த்துவார்.

இப்படியாக விபச்சாரத்தில் மெல்ல மெல்ல தலையெடுக்க ஆரம்பித்த பத்மா கையில் பணம் புரள ஆரம்பித்தது. இந்த நிலையில் பத்மாவின் நடவடிக்கைகள் தெரிந்து மாடலிங் கோ ஆர்டினேட்டர்கள் அவரை முழுமையாகப் புறக்கணிக்க ஆரம்பித்தனர். இதையடுத்து மேலும் தீவிரமாக விபச்சாரத்தில் ஈடுபட்டிருக்கிறார்.

இந் நிலையில் தான் பிரதீப் வந்து சிக்கினார். கடந்த 6 மாதமாக பிரதீப்பும், பத்மாவும், கிண்டி ஸ்டார் ஹோட்டலில் பலமுறை சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனராம்.

பிரதீப்பை மிரட்டப் போய் இப்போது பத்மா சிறைக்குப் போய் விட்டார். பத்மாவின் வலையில் சிக்கியவர்கள் யார் யார் என்பது குறித்து போலீஸார் நடத்திய விசாரணையில், அவரிடம் 40க்கும் மேற்பட்ட தொழிலதிபர்கள் வரை தொடர்பு வைத்திருந்தது தெரிய வந்துள்ளது. இவர்களில் எத்தனை பேரை வீடியோ எடுத்து மிரட்டிப் பணம் கறந்துள்ளார் பத்மா என்று தெரியவில்லை.

மேலும், சஞ்சய் மற்றும் பத்மாவிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ள செல்போன்களில் உள்ள எண்களை வைத்து பத்மாவுக்கு எத்தனை பேருடன் தொடர்பு இருந்தது என்பதும் கணக்கு எடுக்கப்பட்டு வருகிறது.

பத்மாவின் காமக் களியாட்ட வீடியோக்கள் அடங்கிய 10 சிடிக்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இவற்றில் பத்மாவுடன் படு பச்சையான கோலத்தில் பலர் உள்ளனராம். அனைவரும் கோடீஸ்வர தொழிலதிபர்கள் என்று கூறப்படுகிறது. ஆனால் படங்கள் தெளிவாக இல்லை.

இந் நிலையில் போலீஸாரிடம் பத்மா கொடுத்துள்ள வாக்குமூலத்தில்,

நான் பி.எல். படித்துக் கொண்டிருந்தேன். பின்னர் மாடலிங்குக்கு வந்து விட்டேன். இதனால் படிப்பு பாதியில் நின்றது.

மாடலிங்கில் பலருடன் நட்பு கிடைத்தது. அவர்களுடன் ஏற்பட்ட பழக்கத்தால் பணமும் கிடைத்தது. கைக்கு பணம், ஜாலிக்கு ஜாலி, உல்லாசம் என அந்த வாழ்க்கை நன்றாக இருந்ததால் அதை அனுபவித்து செய்தேன். நினைத்த நேரத்தில் பல ஊர்களுக்குப் பறப்பேன்.

பிறகு சினிமா வாய்ப்பு வந்தது. டிவி தொடர்களிலும் நடித்தேன். அந்த சமயத்தில்தான் விபச்சாரத்தில் நான் தீவிரமாக ஈடுபட நேர்ந்தது. சில தொழிலதிபர்கள் எனது அழகில் மயங்கி அனுபவிக்க ஆசைப்பட்டனர். நானும் உடன்பட்டேன். அதற்கு கைமாறாக பெரும் பணம் கிடைத்தது.

அப்படித்தான் பிரதீப்புடனும் தொடர்பு ஏற்பட்டது. அவருடன் இதுவரை 8 முறை உல்லாசம் அனுபவித்துள்ளேன். முதலில் அவர் மட்டும் வந்து போனார். பின்னர் அவரது நண்பர்களையும் கூட்டி வந்தார்.

அவர்கள் சொன்னபடியெல்லாம் நான் ஒத்துழைத்தேன். சந்தோஷம் கொடுத்தேன். இதற்கே அவர்கள் எனக்கு பல கோடிகளைத் தர வேண்டும். அதற்குத் தகுதியானவள் தான் நான். ஆனால் தேவையில்லாமல் என்னை மாட்டி விட்டு விட்டார்.

இன்னும் கூட என்னை அனுபவிக்க பல கோடீஸ்வரர்கள் தயாராக உள்ளனர். ஆனால் நான் இப்போது போலீஸிடம் சிக்கி விட்டேன் என்றாராம் பத்மா மிக தைரியமாக.

போலீசாரிடம் பத்மா பிடிபட்டு விசாரணையில் இருந்தபோது, அவரது செல்லுக்கு ஒரு கால் வந்தது. அவரை போலீசார் பேச அனுமதித்தனர்.

அப்போது பேசிய பத்மா, நான் இப்போ ஒரு மலையாளம் சூட்டிங்ல பிஸி. ஒரு 2 மாதம் கழிச்சு தான் ப்ரீ ஆவேன் என்றாராம். பத்மாவின் இந்த டுபாக்கூரைப் பார்த்து போலீசாரே மலைத்துப் போய்விட்டனராம்.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil